பிரதமர் அலுவலகம்
அறிவின் சாரத்தைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
प्रविष्टि तिथि:
20 JAN 2026 10:36AM by PIB Chennai
பரந்த அறிவும் வரையறுக்கப்பட்ட நேரத்திற்கும் இடையே, சாரத்தில் கவனம் செலுத்துவது குறித்து, காலத்தால் அழியாத ஞானத்தை எடுத்துரைக்கும் ஆழமான சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
अनन्तशास्त्रं बहुलाश्च विद्याः अल्पश्च कालो बहुविघ्नता च।
यत्सारभूतं तदुपासनीयं हंसो यथा क्षीरमिवाम्बुमध्यात्॥
என்ற சமஸ்கிருத ஸ்லோகம், ஞானத்தை அடைவதற்கு எண்ணற்ற வேதங்களும், பல்வேறு அறிவுப் பிரிவுகளும் இருந்தாலும், மனித வாழ்க்கை வரையறுக்கப்பட்ட நேரத்தாலும் எண்ணற்ற தடைகளாலும் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை உணர்த்துகிறது. எனவே, நிலையான மெய்ப்பொருளின் சாராம்சத்தை மட்டும் பகுத்தறிந்து புரிந்துகொள்ள, பாலையும் நீரையும் பிரிக்கும் என்று நம்பப்படுகிற அன்னப் பறவையை ஒருவர் பின்பற்ற வேண்டும்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“अनन्तशास्त्रं बहुलाश्च विद्याः अल्पश्च कालो बहुविघ्नता च।
यत्सारभूतं तदुपासनीयं हंसो यथा क्षीरमिवाम्बुमध्यात्॥”
***
(Release ID: 2216333)
AD/SMB/KR
(रिलीज़ आईडी: 2216354)
आगंतुक पटल : 17