PIB Headquarters
ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறுவது குறித்த காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு
प्रविष्टि तिथि:
19 JAN 2026 4:58PM by PIB Chennai
காமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் நாடாளுமன்ற தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு புதுதில்லியில் இம்மாதம் (ஜனவரி, 2026) 14 முதல் 16-ம் தேதிவரை நடைபெற்றது.
ஜனநாயக நடைமுறைகள், அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் நாடாளுமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
இந்தியா தலைமையில் இந்த மாநாட்டில் 61 நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற தலைவர்கள் / சபாநாயகர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்றங்களில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறுவதை உறுதிசெய்வது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்களை இறுதி செய்வதற்கும், நிகழ்ச்சிகள் குறித்து முடிவெடுப்பதற்கும், உறுப்பு நாடுகளுக்கிடையே ஆண்டுதோறும் நிலைக்குழு கூட்டம் நடத்தப்படுகிறது.
1970 - 71, 1986, 2010 மற்றும் 2026 ஆகிய 4 ஆண்டுகளில் இந்தியா இந்த மாநாட்டை நடத்தியது. இது காமன்வெல்த் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. அடுத்த மாநாடு 2028-ம் ஆண்டு லண்டனில் நடைபெற உள்ளது.
*
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216157®=3&lang=1
TV/SV/LDN/RK
(रिलीज़ आईडी: 2216263)
आगंतुक पटल : 11