அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தொழில்துறை வளர்ச்சி திட்டங்களுக்கான ஆராய்ச்சி, மேம்பாடு, புதுமை கண்டுபிடிப்புகளுக்கான நிதியம்

प्रविष्टि तिथि: 19 JAN 2026 5:22PM by PIB Chennai

தொழில்துறை வளர்ச்சி திட்டங்களுக்கான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதியம் ஒரு லட்சம் கோடி ரூபாய் மூலதன நிதியுடன் இந்த மாத (ஜனவரி 2026) இறுதிக்குள் தொடங்கும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதியன்று வெளியிட்ட அறிவிக்கையின் தொடர்ச்சியாக, இந்த நிதியம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இது தொழில்துறை சார்ந்த வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதரவை வழங்குவதற்கு ஏதுவாக, இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் பொறுப்பு வகிக்கும்.

தனியார் துறையின் ஆராய்ச்சிகள் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிதியத்தின் கீழ் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் மற்றும் உயிரி தொழில்நுட்ப தொழில்துறை ஆராய்ச்சி உதவி கவுன்சில் ஆகிய நிறுவனங்கள் நிதி மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

மிக முக்கியத்துவம் வாய்ந்த தொழில்துறைகளில் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான திட்டங்களை, தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியமும், உயிரி தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த திட்டங்களை உயிரி தொழில்நுட்ப தொழில்துறை ஆராய்ச்சி உதவி கவுன்சிலும் கண்காணிக்கும்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், அறிவியல் துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு மற்றும் திட்டம் சார்ந்த முன்முயற்சிகளை உரிய நேரத்தில் செயல்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு உயர் முன்னுரிமை அளிப்பதுடன், பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகள், ஆராய்ச்சி, தொழில்துறை மேம்பாடு மற்றும் சமூக மேம்பாட்டுக்கான திட்டங்களில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டார்.

***

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216175&reg=3&lang=1

TV/SV/LDN/SH


(रिलीज़ आईडी: 2216234) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी