நிதி அமைச்சகம்
டிஜிட்டல் கடன் மதிப்பீடு அடிப்படையில் பொதுத்துறை வங்கிகள் மூலம் 3.96 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
19 JAN 2026 2:11PM by PIB Chennai
டிஜிட்டல் கடன் மதிப்பீடு அடிப்படையில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன் தொடர்பான விண்ணப்பங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் கடனுதவி வழங்கி வருகின்றன.
இதன்படி 2025-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை 3.96 லட்சத்திற்கும் அதிகமான எம்எஸ்எம்இ நிறுவனங்களின் கடன் விண்ணப்பங்களுக்கு 52,300 கோடி ரூபாய் அளவிலான கடனுதவியை பொதுத்துறை வங்கிகள் வழங்கியுள்ளன.
ஜன்சமர்த் என்ற இணையதளம் வாயிலாக எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான கடனுதவி திட்டம், ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஜிட்டல் தரவுகளின் அடிப்படையில் கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு கடனுதவிகளை வழங்குவதற்கு இந்த இணையதளம் வகை செய்கிறது.
கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர்களின் தரவுகள் குறித்த அங்கீகாரங்கள், அவர்களது அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவை சரிபார்க்கப்பட்டு, ஜிஎஸ்டி தரவுகள், வங்கி கணக்கு அறிக்கைகள், வருமானவரி அறிக்கைகள், கடன் தொடர்பான தகவல் நிறுவனங்களின் தரவுகள் ஆகியவை உரிய முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு எம்எஸ்எம்இ நிறுவனங்களின் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களுக்கு வங்கிகள் ஒப்புதல் வழங்கி வருகிறது.
இதன்மூலம் நேரடியாக வங்கிகளுக்கு செல்வதையும், காகிதப் பயன்பாட்டையும் குறைப்பதுடன், விண்ணப்பங்கள் மீதான சரிபார்ப்புகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு டிஜிட்டல் முறையில் கொள்கை ரீதியிலான ஒப்புதல்கள் வழங்க வகை செய்கிறது.
***
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216047®=3&lang=1
TV/SV/LDN/SH
(रिलीज़ आईडी: 2216150)
आगंतुक पटल : 13