திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் வடகிழக்கு பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையையும் வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது: மத்திய அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி
प्रविष्टि तिथि:
19 JAN 2026 1:54PM by PIB Chennai
திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் வடகிழக்கு பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையையும் வாய்ப்பையும் உருவாக்கியுள்ளதாக மத்திய திறன் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
அசாமில் மண்டல அளவிலான திறன் மேம்பாட்டு போட்டிகள் 26 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. இதில் 8 வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கின்றனர். இந்த திறன் மேம்பாட்டு போட்டிகளை குவஹாத்தி பல்கலைக்கழகத்தில் இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தப் போட்டிகள் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள இளைஞர்களுக்கு தேசிய அளவிலான வாய்ப்புக்களை வழங்குவதாக கூறினார். வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி உயர் முன்னுரிமை அளித்து வருவதாக அவர் கூறினார்.
திறன் மேம்பாட்டு போட்டிகள் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதுடன், ஒழுக்கம், தைரியம் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள உதவுகிறது என்று அவர் கூறினார்.
தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப முறையான கல்வி திட்டத்துடன் திறன் மேம்பாட்டை ஒருங்கிணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இது வேலைவாய்ப்பு, தொழில் முனைவு மற்றும் கற்றலுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதாக அமைச்சர் இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி தெரிவித்தார்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2216042®=3&lang=1
TV/SV/LDN/SH
(रिलीज़ आईडी: 2216148)
आगंतुक पटल : 8