பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுதப்படைகளுக்கான வெடிமருந்து உற்பத்தியில் தற்சார்பை அடையவும் இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றவும் அரசு உறுதிபூண்டுள்ளது பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத் துறை உற்பத்தியில. தனியார் துறை பங்களிப்பை அதிகரிப்பது காலத்தின் தேவை - திரு ராஜ்நாத் சிங்

प्रविष्टि तिथि: 18 JAN 2026 7:04PM by PIB Chennai

ஆயுதப்படைகளுக்கான வெடிமருந்து உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைவதற்கும், நாட்டை அதன் உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இன்று (ஜனவரி 18, 2026) மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள சோலார் என்ற பாதுகாப்பு மற்றும் விண்வெளி உற்பத்தி நிறுவனத்தில் நடுத்தர அளவிலான வெடிமருந்து உற்பத்தி வசதியை அவர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வெடிமருந்து பற்றாக்குறை நாட்டின் பாதுகாப்புத் தயார்நிலைக்கு தடையாக இருந்த காலத்தை நினைவு கூர்ந்தார். இந்தத் துறையில் தன்னிறைவு பெற வேண்டியதன் அவசியத்தை தற்போதைய அரசு உணர்ந்து செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.  இந்த உற்பத்தி மையத்தில் ராணுவம் மற்றும் கடற்படையால் பரவலாகப் பயன்படுத்தப்படும் 30 மிமீ தூரம் பாயக்கூடிய வெடிமருந்துகள் உற்பத்தி செய்யப்படும் என்று கூறினார்.

பாதுகாப்புத் துறை உற்பத்தியை தற்சார்புடன் மாற்றுவதில் தனியார் துறையின் பங்களிப்பை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்த சோலார் நிறுவன குழுமத்தால் தயாரிக்கப்பட்ட நாகாஸ்திரா ட்ரோன்கள், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையன் போது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார். நாகாஸ்திராவின் மேம்பட்ட பதிப்புகளின் வளர்ச்சியை அவர் பாராட்டினார்.

தேசத்திற்கு தற்சார்பு எவ்வளவு முக்கியம் என்பதற்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு எடுத்துக்காட்டு என்று அமைச்சர் குறிப்பிட்டார். பாதுகாப்பு உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறையின் ஈடுபாட்டை அதிகரிப்பது காலத்தின் தேவை என்று திரு ராஜநாத் சிங் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215884&reg=3&lang=1

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2215916) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी