பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியக் கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவு சிங்கப்பூரின் சாங்கி கடற்படைத் தளத்தை சென்றடைந்தது

प्रविष्टि तिथि: 17 JAN 2026 3:00PM by PIB Chennai

ஐஎன்எஸ் திர், ஐஎன்எஸ் ஷர்துல், ஐஎன்எஸ் சுஜாதா மற்றும் இந்திய கடலோர காவல்படைக் கப்பல் சாரதி ஆகிய கப்பல்களை உள்ளடக்கிய இந்தியக் கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவு, 2026 ஜனவரி 15 அன்று சிங்கப்பூரின் சாங்கி கடற்படைத் தளத்தை சென்றடைந்தது. இந்த படைப்பிரிவு தென்கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில், பயிற்சி மேற்கொள்ளவுள்ளது.

2026-ம் ஆண்டு 'தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டு 2026' எனக் கொண்டாடப்படுவதால், இந்தியக் கடற்படையின் இந்தப் பயிற்சி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தப் பயிற்சியின் போது, இந்தியக் கடற்படை, சிங்கப்பூர் குடியரசின்  கடற்படையைச் சேர்ந்த வீரர்கள், தங்களது திறனை மேம்படுத்திக் கொள்வதையும், கடல்சார் ஒத்துழைப்பை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட பல்வேறு துறைமுக நடவடிக்கைகள் மற்றும் தொழில்முறை சார்ந்த விவாதங்களில் பங்கேற்பர். இரு நாடுகளின் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சியாளர்களுக்கு இடையே தொடர்ச்சியான போர் பயிற்சி ஒத்திகை குறித்த பரிமாற்றங்கள், கூட்டு யோகா அமர்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கலாச்சாரப் பரிமாற்றங்களின் ஒரு பகுதியாக, சிங்கப்பூரின் முக்கிய பொது இடங்களில் இந்தியக் கடற்படை இசைக்குழுவின் நிகழ்ச்சிகள் நடைபெறும். கப்பல்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்கும் நாட்களில், அந்நாட்டுப் பள்ளி மாணவர்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிங்கப்பூர் நாட்டிற்கான இந்திய தூதர் டாக்டர் ஷில்பக் அம்புலே, இரு நாடுகளின் கடற்படை வீரர்களுடன் கலந்துரையாடினார். பயிற்சியில் ஈடுபாடு வீரர்கள் மூத்த அதிகாரி மற்றும் படைப்பிரிவு அதிகாரிகள், கடல்சார் பயிற்சி மற்றும் கோட்பாட்டுக் கட்டளையின் தளபதியையும் சந்தித்துப் பேசினார். தகவல் ஒருங்கிணைப்பு மையத்தைச் சேர்ந்த சர்வதேச தகவல் தொடர்பு அதிகாரிகளின் குழு தொழில்முறை சார்ந்த அனுபவங்கள் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215591&reg=3&lang=1

***

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2215634) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी