தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்த கூட்டுப் பிரகடனத்தில் இந்தியாவும் ஜெர்மனியும் கையெழுத்திட்டன
प्रविष्टि तिथि:
16 JAN 2026 1:44PM by PIB Chennai
ஜெர்மனி பிரதமர் திரு பிரெட்ரிக் மெர்ஸ், 2026 ஜனவரி 12, 13 தேதிகளில் இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது இந்தியாவும் ஜெர்மனியும் தொலைத்தொடர்பு ஒத்துழைப்புக்கான கூட்டு பிரகடனத்தில் கையெழுத்திட்டன. இந்த கூட்டுப் பிரகடனத்தில் இந்திய அரசின் சார்பாக தொலைத்தொடர்புத் துறைச் செயலாளர் திரு அமித் அகர்வால், ஜெர்மன் அரசின் சார்பாக இந்தியாவிற்கான ஜெர்மன் தூதர் டாக்டர் பிலிப் அக்கர்மேன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்தியப் பிரதமருக்கும் ஜெர்மனி பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் முக்கிய விளைவுகளில் ஒன்றாக இந்த பிரகடனம் கையெழுத்தானது. இந்தியா-ஜெர்மனி இடையே, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான இரு நாடுகளின் உறுதிப்பாட்டை இந்தக் கூட்டுப் பிரகடனம் பிரதிபலிக்கிறது.
இருநாடுகளின் அரசு, தொழில்துறை, கல்வித்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்டோருக்கு இடையே வழக்கமான ஆலோசனைகள், உயர் நிலை வருடாந்திர கூட்டங்கள் ஆகியவை கொண்ட ஒரு கட்டமைப்பை இந்தக் கூட்டுப் பிரகடம் நிறுவுகிறது. இதன் கீழ், இரு தரப்பினரும் வழக்கமான தகவல் பரிமாற்றம், சிறந்த நடைமுறைகள் பகிர்வு, தொலைத்தொடர்பு துறையில் வணிகம் செய்வதை எளிதாக்குதல் போன்ற துறைகளில் கூட்டு முயற்சிகள் மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215244®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2215290)
आगंतुक पटल : 19