எரிசக்தி அமைச்சகம்
மத்திய மின்துறை அமைச்சகத்தின் 2025-ம் ஆண்டு முக்கிய செயல்பாடுகளும் சில முக்கிய சாதனைகளும்
प्रविष्टि तिथि:
16 JAN 2026 11:41AM by PIB Chennai
2025-ம் ஆண்டு இந்தியாவின் மின் துறைக்கு ஒரு மைல்கல் காலகட்டமாகும். 2025-ம் ஆண்டில் எரிசக்தி உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் ஆகியவற்றில் வரலாற்று முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியா உலகளாவிய எரிசக்தியில் முன்னணி நாடாக மாறும் பாதையில் உறுதியாகச் செல்கிறது.
2025-ம் ஆண்டில் மின்துறையின் சில முக்கிய சாதனைகளும் செயல்பாடுகளும்:
* தேவையைப் பூர்த்தி செய்வதில் சாதனை : 2025-26-ம் நிதியாண்டில் அதிகபட்ச மின் தேவையான 242.49 ஜிகாவாட்டை இந்தியா வெற்றிகரமாக பூர்த்தி செய்தது.
* மின் பற்றாக்குறை பெருமளவு குறைப்பு: உற்பத்தி, பரிமாற்ற திறன்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காரணமாக, தேசிய அளவில் எரிசக்தி பற்றாக்குறை 2025-26-ம் நிதியாண்டில் வெறும் 0.03% ஆகக் குறைந்துள்ளது. இது 2013-14 -ம் நிதியாண்டில் 4.2% ஆக இருந்தது.
* தனிநபர் மின்சார நுகர்வு அதிகரிப்பு: இந்தியாவில் தனிநபர் மின்சார நுகர்வு 2024-25-ம் ஆண்டில் 1460 kWh ஆக உயர்ந்துள்ளது. இது 2013-14 ஆம் ஆண்டில் 957 kWh ஆக இருந்தது.
* மேம்படுத்தப்பட்ட கிடைக்கும் தன்மை: கிராமப்புறங்களில் சராசரி மின்சாரம் கிடைப்பது 2014-ல் சராசரியாக 12.5 மணிநேரத்திலிருந்து தற்போது 22.6 மணிநேரமாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் 2014-ல் சராசரியாக 22.1 மணிநேரமாக இருந்த நிலையில் தற்போது 23.4 மணிநேரம் வரை மின்சாரம் கிடைக்கிறது. இது மின்சார சேவைகளின் நம்பகத்தன்மை, அணுகலில் கணிசமான முன்னேற்றங்கள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.
* நிறுவப்பட்ட மின் திறனில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி : இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறன் 104.4% அதிகரித்து, நவம்பர் 30, 2025 நிலவரப்படி 509.743 ஜிகாவாட்டாக இருந்தது. இது மார்ச் 31, 2014 நிலவரப்படி 249 ஜிகாவாட்டாக இருந்தது.
* புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் பெரிய விரிவாக்கம்: ஏப்ரல் 2014 முதல் 178 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 130 ஜிகாவாட் சூரிய சக்தி, 33 ஜிகாவாட் காற்றாலை மின்சாரம், 3.4 ஜிகாவாட. உயிரி மின்சாரம், 1.35 ஜிகா வாட் சிறிய நீர்மின்சாரம், 9.9 ஜிகாவான் பெரிய நீர்மின்சார உற்பத்தி திறன் ஆகியவை அடங்கும். இது இந்தியாவின் தூய எரிசக்திக்கான வலுவான உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.
* நிலக்கரி இருப்பு நிலை : உள்நாட்டு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள் டிசம்பர் 21, 2025 நிலவரப்படி , 51.7 மில்லியன் நிலக்கரியைக் கொண்டிருந்தன. இதை மார்ச் 2026-க்குள் 66 மில்லியன் டன்னாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* மின்சக்தி கொள்கையில் திருத்தம்: பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, மே 2025-ல் மின் துறைக்கு நிலக்கரி ஒதுக்கீட்டிற்கான திருத்தப்பட்ட கொள்கையை அங்கீகரித்தது. இது மின் துறைக்கான நிலக்கரி வழங்கல் வழிமுறைகளை நெறிப்படுத்துகிறது.
* நீர் மின் திட்டங்கள்: அருணாச்சலப் பிரதேசத்தில் டாடோ-II நீர் மின் திட்டத்துக்கு (700 மெகாவாட்) ஆகஸ்ட் 2025-ல் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த திட்டம் 72 மாதங்களில் ₹8146.21 கோடி செலவில் நிறைவடையும்.
* எரிசக்தி மாற்றத்தில் சாதனை: இந்தியா தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 50% ஒட்டுமொத்த புதைபடிவமற்ற மின் திறன் இலக்கை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துள்ளது. புதைபடிவமற்ற மின் திறனின் பங்கு 2014-ல் 32% ஆக இருந்தது. இது அக்டோபர் 2025-ல் 51% ஆக உயர்ந்துள்ளது. இது தூய்மையான பசுமை எரிசக்தியை நோக்கிய இந்தியாவின் விரைவான மாற்றத்தையும் உலகளாவிய பருவநிலை இலக்குகளுக்கான அதன் உறுதிப்பாட்டையும் நிரூபிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215187®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2215258)
आगंतुक पटल : 12