மக்களவை செயலகம்
காமன்வெல்த் அவைத் தலைவர்கள் மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
தொடக்க அமர்வில் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா உரையாற்றினார்
प्रविष्टि तिथि:
15 JAN 2026 4:41PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.01.2026) புதுதில்லியில் நாடாளுமன்றத்தில் புகழ்பெற்ற மைய மண்டபத்தில் காமன்வெல்த் நாடுகளில் அவைத் தலைவர்கள் (சபாநாயகர்கள்), தலைமை அதிகாரிகளின் 28-வது மாநாட்டைத் தொடங்கி வைத்தார். மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்றங்களின் தலைமை அதிகாரிகள்; நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வரவேற்பு உரை நிகழ்த்திய மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, விரைவான தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து கவனத்தை எடுத்துரைத்தார். செயற்கை நுண்ணறிவு, சமூக ஊடகங்கள் போன்றவை ஜனநாயக அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்தியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அவற்றின் தவறான பயன்பாடுகள், இணையதள குற்றங்கள் போன்றவை கவலைகளுக்கு வழிவகுத்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்த சவால்களுக்கு பொருத்தமான தீர்வுகளை உருவாக்குவது கூட்டுப் பொறுப்பு என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் அனுபவத்தை எடுத்துரைத்த திரு ஓம் பிர்லா, இந்திய நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருவதாகக் கூறினார். நாடாளுமன்றம் மற்றும் அரசின் கூட்டு முயற்சிகள் மூலம், இந்தியா பல காலாவதியான மற்றும் தேவையற்ற சட்டங்களை ரத்து செய்து, புதிய, நலன் சார்ந்த சட்டங்களை இயற்றியுள்ளது என்று திரு ஓம் பிர்லா குறிப்பிட்டார். இந்த முயற்சிகள் வளர்ச்சியடைந்த, சுயசார்பு கொண்ட நாடாக மாறுவதற்கான இலக்கை நோக்கி இந்தியாவின் முன்னேற்றத்தை துரிதப்படுத்தியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியா தனது ஜனநாயக அமைப்புகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இந்த முயற்சிகள், ஜனநாயக செயல்பாட்டில் மக்களின் உள்ளடக்கிய பங்கேற்பை உறுதி செய்துள்ளதாகவும், ஜனநாயகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளதாகவும் திரு ஓம் பிர்லா கூறினார்.
இந்த மாநாட்டின் செயல் திட்டத்தை எடுத்துரைத்த திரு ஓம் பிர்லா, இந்தியாவால் நடத்தப்படும் இந்த மாநாடு, காமன்வெல்த் முழுவதிலுமிருந்து, நாடாளுமன்ற அவைத் தலைவர்களை ஒன்றிணைத்து, சமகால சவால்கள் குறித்தும், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சிறந்த நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கும் என்று குறிப்பிட்டார். இந்த மாநாடு, திரு ஓம் பிர்லாவின் நிறைவுரையுடன் நாளை (16.01.2026) நிறைவடையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214927®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2215054)
आगंतुक पटल : 10