பாதுகாப்பு அமைச்சகம்
தில்லி முதலமைச்சர், என்சிசி குடியரசு தின முகாமைப் பார்வையிட்டார்
प्रविष्टि तिथि:
15 JAN 2026 3:58PM by PIB Chennai
தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, இன்று (ஜனவரி 15, 2026) தில்லி கன்டோன்மெண்டில் உள்ள தேசிய மாணவர் படையின் (என்சிசி) குடியரசு தின முகாமுக்குச் சென்றார். மாணவர் படையினரின் செயல் விளக்கங்களை அவர் பார்வையிட்டார். அவர்களின் அணிவகுப்பு, இசை நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியவை நாட்டின் இதயத் துடிப்பை பிரதிபலிப்பதாக இருந்தன என்று அவர் கூறினார்.
துணிச்சலான, பொறுப்புள்ள இளைஞர்களை உருவாக்குவதில் என்சிசி ஆற்றும் பங்கை தில்லி முதலமைச்சர் பாராட்டினார். அதே நேரத்தில் தேசியம், ஒற்றுமை, அர்ப்பணிப்பு ஆகியவற்றை வளர்ப்பதில் என்சிசி ஆற்றும் பங்கையும் அவர் பாராட்டினார். என்சிசி-யின் முழுமையான பயிற்சி கட்டமைப்பை எடுத்துரைத்த அவர், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் என்சிசி முகாம்கள் அமைந்துள்ளன என்றார்.
இளைஞர்கள் வலுவான கடமை உணர்வுடன் முன்னேறிச் செல்லுமாறு அவர் அறிவுறுத்தினார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது ஒரு பகிரப்பட்ட பணி என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் பெருமையை நிலைநிறுத்தும் வகையில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று திருமதி ரேகா குப்தா கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214909®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2215038)
आगंतुक पटल : 8