பிரதமர் அலுவலகம்
ராணுவ தினத்தில் நமது ராணுவத்தின் வீரத்திற்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
துணிச்சல், தன்னம்பிக்கை, தளராத கடமைப்பு ஆகியவை தொடர்பாக ஆயுதப் படைகளைப் பாராட்டும் வகையில் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
15 JAN 2026 8:55AM by PIB Chennai
ராணுவ தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.01.2026) நமது இந்திய ராணுவத்தின் அசாத்திய துணிச்சலுக்கும், உறுதியான அர்ப்பணிப்புக்கும் மரியாதை செலுத்தியுள்ளார்.
மிகவும் சவாலான சூழ்நிலைகளிலும் நாட்டின் எல்லைகளைக் காக்கும் வீரர்களின் உறுதியான அர்ப்பணிப்பை திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பகிர்ந்துள்ள அவர், தன்னலமற்ற சேவையின் உயர்ந்த கொள்கைகளைப் புகழ்ந்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் வீரத்துக்கும் தியாகத்திற்கும் நாட்டின் நன்றியை உறுதிப்படுத்தும் வகையில், பிரதமர் தமது மரியாதையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
“ராணுவ தினத்தன்று, இந்திய ராணுவத்தின் துணிச்சலுக்கும் உறுதியான அர்ப்பணிப்புக்கும் மரியாதை செலுத்துவோம்.
நமது வீரர்கள் தன்னலமற்ற சேவையின் அடையாளமாக உள்ளனர். மிகவும் சவாலான சூழ்நிலைகளிலும் மன உறுதியுடன் தேசத்தைப் பாதுகாக்கிறார்கள். அவர்களின் கடமை உணர்வு நாடு முழுவதும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு நாடு நன்றி உணர்வை வெளிப்படுத்துகிறது.
பணியின் போது தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களை நான் ஆழ்ந்த மரியாதையுடன் நினைவு கூர்கிறேன். @adgpi”
"மிகத் தொலைதூர இடங்கள் முதல் பனி மூடிய சிகரங்கள் வரை பல இடங்களில் பணியாற்றும், நமது ராணுவத்தினரின் துணிச்சலும் வீரமும் ஒவ்வொரு குடிமகனையும் பெருமைப்படுத்துகிறது. எல்லையைக் காக்கும் வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!"
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214767®=3&lang=1
***
AD/PLM/RK
(रिलीज़ आईडी: 2214863)
आगंतुक पटल : 9