நிதி அமைச்சகம்
பொதுத்துறை வங்கிகளுடன் இணைந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான கூட்டு சம்பளக் கணக்கு தொகுப்பை நிதிச் சேவைகள் துறை அறிமுகப்படுத்தியுள்ளது
प्रविष्टि तिथि:
14 JAN 2026 7:28PM by PIB Chennai
மத்திய அரசு ஊழியர்களின் நிதி நல்வாழ்வு மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை (DFS) ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, பொதுத்துறை வங்கிகள் 'மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளக் கணக்குத் தொகுப்பை' அறிமுகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பளக் கணக்குத் தொகுப்பை நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் திரு எம். நாகராஜு இன்று அறிமுகப்படுத்தினார். இந்த வெளியீட்டு நிகழ்வில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள், என்பிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டனர். இந்த முயற்சி, 2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் தொலைநோக்குப் பார்வையுடனும், 2047க்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற தேசிய உறுதிப்பாட்டுடனும் ஒத்துப்போகிறது. அனைத்துப் பிரிவுகளிலும் [குழு ஏ, பி மற்றும் சி] ஊழியர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு, சீரான தன்மை மற்றும் வசதியை உறுதி செய்வதற்காக வங்கிகளுடன் கலந்தாலோசித்து தொகுப்புகள் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சி, பொது நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் மத்திய அரசு ஊழியர்கள், ஒற்றைச் சாளர தீர்வு மூலம் நவீன வங்கிச் சேவைகள் மற்றும் விரிவான நிதிப் பாதுகாப்பைப் பெறுவதை உறுதி செய்கிறது. காப்பீடு, மருத்துவக் காப்பீடு மற்றும் மேம்படுத்தப்பட்ட வங்கி வசதிகளை ஒரே சம்பளக் கணக்குத் தொகுப்பில் ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தத் திட்டம் ஊழியர்களுக்கு எளிதான அணுகல், நிதிப் பாதுகாப்பு மற்றும் மன அமைதியை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214692®=3&lang=1
***
TV/BR/SE
(रिलीज़ आईडी: 2214747)
आगंतुक पटल : 14