நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களுக்கான தேசிய இளைஞர் நாடாளுமன்றப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா தில்லியில் நாளை நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 14 JAN 2026 12:23PM by PIB Chennai

ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களுக்கான 26-வது தேசிய இளைஞர் நாடாளுமன்றப் போட்டி, 2024-25-ல் வெற்றி பெற்ற பள்ளிகளுக்குப் பரிசு வழங்கும் விழா , நாளை (ஜனவரி 15 , 2026 வியாழக்கிழமை) பிற்பகல் 3:00 மணிக்கு புது தில்லியின் ரஃபி மார்க்கில் உள்ள மாவலங்கர் அரங்கத்தில் நடைபெறும் .

 

 நாடாளுமன்ற விவகாரங்கள்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் விழாவிற்குத் தலைமை வகித்து, போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்குப் பரிசுகளை வழங்குவார்.

 

ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களில் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் இளைஞர் நாடாளுமன்றப் போட்டிகளை நடத்தி வருகிறது. ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களுக்கான தேசிய இளைஞர் நாடாளுமன்றப் போட்டித் திட்டத்தின் கீழ், இந்தத் தொடரின் 26-வது போட்டி 2024-25-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் உள்ள நவோதயா வித்யாலயா சமிதியின் 8 பிராந்தியங்களில் உள்ள 88 பள்ளிகளில் நடத்தப்பட்டது.

 

இளைஞர் நாடாளுமன்றத் திட்டமானது, இளம் தலைமுறையினரிடையே சுய ஒழுக்கம், பல்வேறு கருத்துக்களை நேர்மையாக வெளிப்படுத்தும் தன்மை, ஜனநாயக வாழ்க்கை முறை போன்ற நற்பண்புகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்தத் திட்டம் மாணவர்களுக்கு நாடாளுமன்றத்தின் நடைமுறைகள், விவாத நுட்பங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி, அவர்களின் தன்னம்பிக்கையையும் தலைமைத்துவத் திறனையும் வளர்க்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214441&reg=3&lang=1

(Release ID: 2214441)

****

AD/PLM/SH


(रिलीज़ आईडी: 2214470) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati