மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தேசிய தொழில்நுட்பம், அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 13-வது கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார்
प्रविष्टि तिथि:
13 JAN 2026 7:32PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இன்று பாரத மண்டபத்தில் நடைபெற்ற தேசிய தொழில்நுட்பம், அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் (NITSER) 13-வது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் (IISERs) 3-வது நிலைக்குழு கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
நமது தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (NIT) மற்றும் இந்திய பொறியியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் (IIEST) கல்வி மற்றும் ஆராய்ச்சி தரங்களை உயர்த்துதல், நிர்வாகத் திறனை மேம்படுத்துதல் மற்றும் புதுமை மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்துதல் குறித்த விளக்கக்காட்சிகளை திரு தர்மேந்திர பிரதான் பார்வையிட்டார். மேலும், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
நமது பாடத்திட்டம் தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். நமது முனைவர் பட்டப் படிப்புகள் தொழில்துறையை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். புதிய மற்றும் வளர்ந்து வரும் பணிகள் மற்றும் 21-ம் நூற்றாண்டின் தேவைகளின் அடிப்படையில் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு தொழில்துறை தலைமையிலான பாடத்திட்டக் குழுவை உருவாக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
நமது முதன்மையான தொழில்நுட்ப நிறுவனங்களும் அங்கீகார கட்டமைப்பின் கீழ் வர வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
என்ஐடி மற்றும் ஐஐஇஎஸ்டி நிறுவனங்கள், பயன்பாட்டுக் கல்வி, ஆராய்ச்சி, புதுமை மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் பணியாளர் மேம்பாட்டிற்கான துடிப்பான மையங்களாகச் செயல்படத் தயாராக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தேச முன்னேற்றத்தை முன்னெடுப்பதிலும், வளர்ச்சியடைந்த பாரதத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதிலும் அவை முக்கிய பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214267®=3&lang=2
(Release ID: 2214267)
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2214339)
आगंतुक पटल : 6