PIB Headquarters
azadi ka amrit mahotsav

விரைவுசக்தி சரக்குப் போக்குவரத்து முனையங்கள் கொள்கை மூலம் 8600 கோடி ரூபாய் அளவுக்கு தனியார் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 13 JAN 2026 1:19PM by PIB Chennai

இந்திய சரக்கு போக்குவரத்துத்துறை கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன் நடவடிக்கையால் சரக்குப் போக்குவரத்து செலவு தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.97 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. இந்திய ரயில்வே ஆண்டுக்கு 192 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறனுடைய 306 விரைவு சக்தி சரக்குப் போக்குவரத்து முனையங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 118 முனையங்கள் ஏற்கனவே செயல்படத் தொடங்கியுள்ளன.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2672 மில்லியன் டன் சரக்குகள் சாலை வழியிலிருந்து ரயில்வழி சரக்குப் போக்குவரத்துக்கு மாற்றப்பட்டதன் மூலம் 143.3 மில்லியன் டன் கரியமில வாயு சேமிக்கப்பட்டுள்ளது. விரைவு சக்தி சரக்குப் போக்குவரத்து முனையக் கொள்கையின் கீழ், தனியார் முதலீடு சுமார் ரூ.8,600 கோடி ஈர்க்கப்பட்டுள்ளது. விரைவு சரக்குப் போக்குவரத்து முனையங்கள் மூலம் 2022-23 மற்றும் 2024-25-ம் ஆண்டுகளுக்கு  இடையேயான வருவாய் 4 மடங்கு அதிகரித்து ரூ.12,608 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214076&reg=3&lang=1

***

AD/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2214216) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Gujarati