மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இஸ்ரேலில் நடைபெறும் கடல் உணவு பாதுகாப்பு குறித்து இரண்டாவது உலகளாவிய மாநாட்டில் மத்திய அமைச்சர் திரு ராஜிவ் ரஞ்சன் சிங் பங்கேற்கிறார்

प्रविष्टि तिथि: 12 JAN 2026 10:12PM by PIB Chennai

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜிவ் ரஞ்சன் சிங், 2026 ஜனவரி 13 முதல் 15-ம் தேதி வரை இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டின் இலாட் நகரில் நடைபெறவுள்ள ‘கடல் உணவு பாதுகாப்பு குறித்த இரண்டாவது உலகளாவிய உச்சிமாநாடு: கடல்சார் எதிர்காலம்’ என்ற நிகழ்வில் பங்கேற்க இஸ்ரேல் வேளாண் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு அவி டிக்டர் அழைப்பின் பேரில் அவர் அங்கு செல்கிறார்.

இப்பயணம் இந்தியா இஸ்ரேல் இடையே வளர்ந்து வரும் உத்திசார்ந்த பொருளாதார உடன்பாட்டை சுட்டிக்காட்டி, மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின துறையில் வலுவான இருதரப்பு ஒத்துழைப்புக்கான இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

இம்மாநாட்டில் பங்கேற்பது மட்டுமின்றி, இஸ்ரேல் வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் திரு அவி டிக்டர் மற்றும் மாநாட்டில் பங்கேற்கும் இதர நாடுகளின் அமைச்சர்களுடனும் திரு ராஜிவ் ரஞ்சன் சிங் இருதரப்பு பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் நாட்டின் வேளாண், மீன்வளம் மற்றும் கடல்வாழ் உயிரின துறைகளைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளையும் அமைச்சர் சந்திக்க உள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213538&reg=3&lang=1

****

AD/IR/SH


(रिलीज़ आईडी: 2213988) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam