இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தேசிய விளையாட்டு நிர்வாக விதிமுறைகள் 2026-ஐ மத்திய அரசு வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
12 JAN 2026 4:53PM by PIB Chennai
தேசிய விளையாட்டு நிர்வாக சட்டம் 2025-ன் கீழ், தேசிய விளையாட்டு நிர்வாக விதிமுறைகள் 2026-ஐ மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
சிறந்த தகுதியுடைய விளையாட்டு வீரர்களைச் சேர்த்தல், பொதுக்குழு மற்றும் நிர்வாகக் குழுவின் அமைப்பு, தேர்தல் நடைமுறைகள், தேசிய விளையாட்டு அமைப்புகள் மற்றும் பிராந்திய விளையாட்டு கூட்டமைப்புகளின் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான அளவுகோல்கள் ஆகியவற்றிற்கான நெறிமுறைகள் இந்த விதிகளில் இடம்பெற்றுள்ளது.
தேசிய விளையாட்டுத் தேர்தல் குழுவிற்கான விதிகளையும் தேசிய விளையாட்டு வாரியத்துடன் இணைக்கப்பட்ட பிரிவுகளைப் பதிவு செய்தல் மற்றும் காலமுறையில் புதுப்பிப்பதற்கான நடைமுறைகள் குறித்தும் விதிகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த விதிகள் தேசிய விளையாட்டு அமைப்புகளின் பொது அமைப்புகளில் சிறந்த தகுதியுடைய குறைந்தது நான்கு விளையாட்டு வீரர்களை சேர்ப்பதற்கு வகை செய்கின்றன. பொதுக்குழுவில் மகளிரின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய 50 சதவீத அளவிற்கு சிறந்த தகுதியுடைய மகளிர் விளையாட்டு வீர்ர்களை சேர்ப்பதற்கான அம்சங்கள் விதிகளில் இடம்பெற்றுள்ளது.
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம், 2025-ல் இடம்பெற்றதுபோல், தேசிய விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகக் குழுவில் குறைந்தது நான்கு மகளிர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு தேசிய விளையாட்டு அமைப்பும் அதன் துணைச் சட்டங்கள் மூலம் நிர்வாகக் குழுவில் மகளிருக்கு குறிப்பிட்ட பணியை ஒதுக்கலாம் என்று விதிகளில் கூறப்பட்டுள்ளது.
***
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213803®=3&lang=1
TV/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2213855)
आगंतुक पटल : 16