பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகரும் இலக்கை தாக்கக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது

प्रविष्टि तिथि: 12 JAN 2026 1:39PM by PIB Chennai

நகரும் இலக்கை தாக்கக்கூடிய மூன்றாம் தலைமுறை உயர்தர மிக்க பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக மேற்கொண்டது.

2026 ஜனவரி 11 அன்று மகாராஷ்டிராவின் அகில்யா நகரில் உள்ள கே.கே. ரேஞ்சஸில், ஐதராபாத்தில் உள்ள டிஆர்டிஓ வின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் இச்சோதனையை நடத்தியது.

ஐதராபாத்தில் உள்ள இம்ரத் ஆராய்ச்சி மையம், ஜோத்பூரில் உள்ள பாதுகாப்பு ஆய்வகம், பாரத் டைனமிக் நிறுவனம் மற்றும் பாரத் எலக்டரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் உதவியுடன் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டது.

இந்த வெற்றிகரமான சோதனைக்காக டிஆர்டிஓ, ஆயுத உற்பத்திக்கான கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். தற்சார்பு இந்தியா என்ற நிலையில் இது முக்கியமான நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

***

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2213690&reg=3&lang=1

TV/IR/LDN/KR


(रिलीज़ आईडी: 2213813) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English , Urdu , हिन्दी , Marathi , Bengali