ஆயுஷ்
இந்தியாவின் மூலிகைத் தாவர விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் பண்ணையில் தரம் கண்டறியும் தன்மையை அமல்படுத்த நிபுணர்கள் வலியுறுத்தல்
प्रविष्टि तिथि:
12 JAN 2026 12:54PM by PIB Chennai
தேசிய மருத்துவத் தாவர வாரியம் உள்ளிட்ட ஆயுஷ் அமைச்சக நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள், "பண்ணையில் மருத்துவத் தாவரங்களின் தர மதிப்பீட்டிற்கான கருவிகளின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு" குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கில் கலந்துகொண்டனர். அப்போது மருத்துவத் தாவரங்களின் தரம் மற்றும் வளர்ச்சியை, பண்ணையிலிருந்து கண்காணித்து, சரிபார்த்து, ஆவணப்படுத்த செயற்கை நுண்ணறிவு மற்றும் அது தொடர்புடைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் 2026 ஜனவரி 8,9 ஆகிய இரண்டு நாட்கள் நடந்த இந்தக் கருத்தரங்கு, நாட்டின் மருத்துவத் தாவரத் துறையில் நாடுதழுவிய கவனத்தை ஈர்த்ததுடன், மூலப்பொருட்களின் உறுதிப்படுத்தப்பட்ட தரம், கண்டறியும் தன்மை, தரப்படுத்துதல் ஆகியவற்றை பண்ணையிலேயே நடைபெறுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இக்கருத்தரங்கு தேசிய மருத்துவ தாவர வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி பேராசிரியர் டாக்டர் மகேஷ் குமார் தர்ஹிச், ஆயுர்வேத பயிற்றுவித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பேராசிரியர் டாக்டர் தனுஜா நேசரி ஆகியோரின் முக்கிய உரையுடன் தொடங்கியது.
தரத்தை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சிக்குத் தேவையான தேசிய கொள்கை மற்றும் அறிவியல் பின்னணியாக அவர்களது உரைகள் அமைந்தன. இந்திய மருத்துவத் தாவர மூலப்பொருட்கள் மீது உலகளாவிய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக, புதுமை கண்டுபிடிப்பு, ஒழுங்குபடுத்துதல், பாரம்பரிய அறிவு ஆகியவற்றை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்களுடைய உரையில் வலியுறுத்தினர்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213646®=3&lang=1
TV/IR/LDN/KR
(रिलीज़ आईडी: 2213802)
आगंतुक पटल : 9