புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அபுதாபியில் சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் மாநாட்டில் மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி உரையாற்றினார்

பசுமை எரிசக்தி முதலீட்டிற்கான முன்னணி நாடாக இந்தியா திகழ்கிறது: திரு பிரல்ஹாத் ஜோஷி

प्रविष्टि तिथि: 11 JAN 2026 5:54PM by PIB Chennai

அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் 16-வது மாநாட்டில், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரகல்ஹாத் ஜோஷி இன்று (11.01.2026) பங்கேற்று தேசிய அறிக்கையை வழங்கினார். சமமான, குறைந்த செலவிலான, நிலையான உலகளாவிய எரிசக்தி மாற்றத்திற்கான இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார்.

இந்தியாவின் எரிசக்தி மாற்ற அணுகுமுறை, உலகம் ஒரே குடும்பம் - ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கொள்கையால் வழிநடத்தப்படுகிறது என்று கூறினார். 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதைபடிவ எரிபொருள் அல்லாத நிறுவப்பட்ட மின் திறனையும், 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வையும் அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.

பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட தேசிய இலக்கை, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 2025-ம் ஆண்டில் இந்தியா எட்டியதாகவும், நிறுவப்பட்ட மின்சாரத் திறனில் 50 சதவீதத்தை புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து இந்தியா ஏற்கனவே உற்பத்தி செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 266 ஜிகா வாட்டைத் தாண்டியுள்ளது என அவர் கூறினார்.

பசுமை எரிசக்தி விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும், சூரிய, காற்றாலை உற்பத்தியை விரிவுபடுத்தவும் இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார். நிலையான கொள்கைகள், வெளிப்படையான சந்தைக முறைகளுடன், தூய்மை எரிசக்தி முதலீட்டிற்கான மிகவும் சிறந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று திரு பிரல்ஹாத் ஜோஷி கூறினார்.

சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் 16-வது மாநாடு, 2026 ஜனவரி 10 முதல் 12 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் நடைபெறுகிறது. "மனிதகுலத்தை மேம்படுத்துதல்: பகிரப்பட்ட செழிப்புக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி" என்ற கருப்பொருளில் இந்த அமர்வு நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213440&reg=3&lang=1

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2213484) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Malayalam