பிரதமர் அலுவலகம்
சோம்நாத் பயணத்தின் சில காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
10 JAN 2026 11:00PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் மாநிலம் சோம்நாத் பயணத்தின் சில காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
“நமது நாகரிகத்தின் பெருமைமிக்க அடையாளமான சோம்நாத்திற்கு வந்திருப்பதில் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.
1026-ம் ஆண்டில் சோம்நாத் கோவிலின் மீதான முதல் தாக்குதல் நடந்து ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், தேசம் முழுவதும் ஒன்றிணைந்து கொண்டாடும் சோமநாத் சுயமரியாதைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைந்துள்ளது.
எனக்கு அளித்த அன்பான வரவேற்புக்காக மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.”
“ஜெய் சோம்நாத்!
இன்றைய வரவேற்பு மிகவும் சிறப்பானதாக இருந்தது.”
“இன்று மாலை சோம்நாத்தில், ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையின் கூட்டத்திற்குத் தலைமை வகித்தேன். கோவில் வளாகத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்தும் சோம்நாத் யாத்திரையை இன்னும் சிறப்பானதாக மாற்றுவதற்கான வழிகள் குறித்தும் நாங்கள் ஆய்வு செய்தோம்.”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213359®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2213384)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam