மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லி உலக புத்தகக் கண்காட்சியை மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 10 JAN 2026 5:26PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று (10.01.2026) புது தில்லி உலக புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கத்தார் கலாச்சாரத் துறை அமைச்சர் அப்துல்ரஹ்மான் பின் ஹமாத் பின் ஜாசிம் பின் அல் தானி, ஸ்பெயின் கலாச்சார அமைச்சர் எர்னஸ்ட் உர்டாசுன் டோமெனெக், மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளர் டாக்டர் வினீத் ஜோஷி மற்றும் கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது  திரு தர்மேந்திர பிரதான், வங்காளம், அசாமி, பஞ்சாபி, மலையாளம், உருது, மராத்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட "தி சாகா ஆஃப் குடோபலி: தி அன்சங் ஸ்டோரி ஆஃப் 1857" என்ற புத்தகத்தை வெளியிட்டார். குடோபலி சாகா பற்றிய காணொளியும் திரையிடப்பட்டது.

 இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர், புத்தகக் கண்காட்சியில் கத்தார் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளின் பங்கேற்பு, இந்த கலாச்சார மற்றும் இலக்கிய நிகழ்வின் முக்கியத்துவத்தை மேலும் மேம்படுத்தியுள்ளன என்று கூறினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி வாசிப்பு கலாச்சாரத்தை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார் என்று கூறிய அமைச்சர், பிரதமரின் தொலைநோக்குப் பார்வை உள்கட்டமைப்பு அல்லது தொழில்நுட்பத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை என்று கூறினார். மாறாக தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளமாக அறிவை அங்கீகரித்து விழிப்புணர்வை உருவாக்குவதிலும் அந்த தொலைநோக்குப் பார்வை உள்ளது என்று அவர் கூறினார். இந்த நிகழ்வு புத்தகங்கள் மற்றும் உரையாடல்கள் மூலம் நாட்டின் வாசிப்பு கலாச்சாரத்தில் புதிய ஆற்றலைப் புகுத்தும் என்றும் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

 

2026 ஜனவரி 10 முதல் 18 வரை புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. புத்தகக் கண்காட்சிக்கான நுழைவு அனுமதி முதல் முறையாக இலவசமாக்கப்பட்டுள்ளது . ஒன்பது நாள் புத்தகக் கண்காட்சி 35-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்கள் புத்தகங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். 600-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளும் இதில் நடைபெறவுள்ளன. 20 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Release ID: 2213262)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2213298) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Marathi , Malayalam