நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிதி சேவைகள் துறையின் 2025-ம் ஆண்டு முக்கிய செயல்பாடுகளும் சில முக்கிய சாதனைகளும்

प्रविष्टि तिथि: 10 JAN 2026 11:30AM by PIB Chennai

நிதிச் சேவைகள் துறை 2025-ம் ஆண்டில் தனது மகத்தான சீர்திருத்தப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டது. 2025-ம் ஆண்டில் இந்தத் துறையின் சில முக்கிய செயல்பாடுகளும் சில முக்கிய சாதனைகளும் பின்வருமாறு.

* உங்கள் பணம், உங்கள் உரிமை இயக்கம், வங்கி திருத்தச் சட்டம் போன்ற முயற்சிகள் மூலம் வலுவான, உறுதியான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

* இந்திய வங்கிகள் சங்கத்தின் வழிகாட்டுதல் குழுவால் மேற்பார்வையிடப்படும், அனைத்து பொதுத் துறை வங்கிகளின் முழுநேர இயக்குநர்களையும் கொண்ட செயல்திட்டம் இத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

* டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில், நிலையான வளர்ச்சி காணப்பட்டது. இது முந்தைய நிதியாண்டை விட 41% அதிகரித்துள்ளது.

* பிரதமரின் ஜன் தன் திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம் போன்ற முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருவதால், நிதி உள்ளடக்கம் ஒரு முதன்மையான முன்னுரிமையாக உள்ளது. 2025-ம் ஆண்டு நிலவரப்படி, இந்தத் திட்டங்களும் கொள்கை முயற்சிகளும் அவற்றின் வரம்பை விரிவுபடுத்தியுள்ளன.

* வங்கி சீர்திருத்தங்களால், வங்கித் துறையின் நிதி ஆரோக்கியமும் வலிமையும் கணிசமாக மேம்பட்டுள்ளது.

 

* உற்பத்தித் துறைகளுக்கான கடன் வழங்குதல் நல்ல நிலையில் வளர்ந்து வருகிறது. வராக் கடன் விகிதம் குறைந்து வருவதால் வங்கிகளின் செயல்திறன் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.

* 2024-25 நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ₹1.78 லட்சம் கோடி மொத்த நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளன.

* 2023-24-ம் நிதியாண்டில் பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த ஈவுத்தொகை ₹27,830 கோடி ஆக இருந்த நிலையில், 2024-25-ம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் ₹34,990 கோடி ஈவுத்தொகையை வழங்கின.

* விரிவான சீர்திருத்தங்களை செயல்படுத்துவதன் மூலம், பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலை கணிசமாக மேம்பட்டுள்ளது. 2024-25-ம் நிதியாண்டு வரை சந்தையில் இருந்து 24.86 லட்சம் கோடி மூலதனத்தைத் திரட்டியுள்ளன.

* தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் தனது பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் இந்திய அரசு வெற்றிகரமாக வளங்களைத் திரட்டியுள்ளது. மகாராஷ்டிரா வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அரசின் பங்குகளின் விற்பனைக்கான சலுகை மூலம் முறையே ₹2,627.52 கோடி மற்றும் ₹1,419.36 தொகை பெறப்பட்டது.

* வங்கிகள் திருத்தச் சட்டம், 2025, நிர்வாகத் தரங்களை மேம்படுத்தியுள்ளது. வைப்புத்தொகையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் தணிக்கைத் தரத்தையும் மேம்படுத்தியுள்ளது.

* வங்கி சீர்திருத்தங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில், "உங்கள் பணம் , உங்கள் உரிமை" என்ற இயக்கம் நடத்தப்பட்டது.  உரிமை கோரப்படாத நிதி குறித்து மூன்று மாத விழிப்புணர்வு இயக்கம் அக்டோபர்-25 முதல் டிசம்பர்-25 வரை செயல்படுத்தப்பட்டது.  இந்த இயக்கம், 4500 கோடி ரூபாய் மதிப்புள்ள உரிமைகோரல்களை உரிமையாளர்களுக்கு திருப்பி அனுப்ப வழிவகுத்தது.

* பொதுத்துறை வங்கிகளின் மூத்த தலைவர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்ட இரண்டு நாள் நிகழ்ச்சி 2025 செப்டம்பர் 12-13 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டது. கடன் வளர்ச்சி, பணியாளர் தயார்நிலை, தொழில்நுட்ப நவீனமயமாக்கல், தேசிய முன்னுரிமைகள் போன்ற கருப்பொருள்களில் இதில் விவாதங்கள் நடைபெற்றன. 

* பொதுத்துறை வங்கிகள், 2047-ம் ஆண்டுக்கான வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பொதுத்துறை வங்கிகளின் செயல்திட்ட அறிக்கையை நவம்பர் 12, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டன.

* வங்கி ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க இந்தத் துறை கூடுதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது தேர்வு செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துகிறது.

* இந்திய காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 74% லிருந்து 100% ஆக உயர்த்தப்பட்டது. இது நிலையான முதலீட்டை ஈர்ப்பதற்கும், தொழில்நுட்ப பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கும், சமூகப் பாதுகாப்பிற்கும் உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213154&reg=3&lang=1

(Release ID: 2213154)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2213199) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali , Bengali-TR