ஜல்சக்தி அமைச்சகம்
நமாமி கங்கை இயக்கத்தின் 2-வது கட்டத்தில் கங்கை, யமுனை நதிகளின் தூய்மைக்காக 5 முக்கிய கழிவு நீர் உள்கட்டமைப்புத் திட்டங்கள்
प्रविष्टि तिथि:
09 JAN 2026 1:03PM by PIB Chennai
நமாமி கங்கை இயக்கத்தின் 2-வது கட்டத்தில் கங்கை மற்றும் யமுனை நதிகளின் தூய்மையை மேம்படுத்தும் வகையில் 5 கழிவுநீர் உள்கட்டமைப்பு செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்கள் வழியாகச் செல்லும் நதிகளை புனரமைக்கவும் மாசு அடைவதைத் தடுக்கும் வகையிலும், இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 2025-26-ம் நிதியாண்டில் இதுவரை 9 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நகர்ப்புற மையங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகளுக்கான உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2-வது காலாண்டு வரை உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தம்சிங் நகர், உத்தரப்பிரதேச மாநிலத்தின் மொராதாபாத், மேற்கு வங்கத்தில் மடேஷ் தலா, ஜாங்கிப்பூர் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
இந்த 5 புதிய திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் நமாமி கங்கை திட்டத்தின் கீழ் கழிவுநீர் சுத்திகரிக்கும் திட்டத்தின் திறன் நாள் ஒன்றுக்கு 3,976 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்க முடியும். மாசு அடைந்த கழிவு நீர் நதிகளுடன் கலப்பதைத் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சுத்திக் கரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது. இது நகர்ப்புற துப்புரவு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212771®=3&lang=1
---
TV/SV/KPG/PD
(रिलीज़ आईडी: 2212848)
आगंतुक पटल : 10