PIB Headquarters
azadi ka amrit mahotsav

பால்வளத்துறையை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 09 JAN 2026 10:32AM by PIB Chennai

விவசாயிகளை மையமாகக் கொண்ட வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் வகையில் பால்வளத்துறையை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலக அளவில் பால் உற்பத்தியில் 25 சதவீதம் இந்தியா பங்களிப்பு செய்கிறது. உற்பத்தி வெளிப்படைத்தன்மை, விவசாயிகளின் நலன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் டிஜிட்டல் கருவிகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. விவசாயிகள், கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் வகையில் டிஜிட்டல் தளத்தை மேம்படுத்துவதில் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் செயல்பட்டு வருகிறது.  உலக அளவில் மிகப் பெரிய பால் உற்பத்திக்கான சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தும் வகையிலும் நவீன செயல்பாடுகளை நோக்கமாகக் கொண்டும் அவற்றை டிஜிட்டல் மயமாக்க வேண்டியது அவசியமாகிறது.

தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கத்தின் கீழ் 35.68 கோடிக்கும் அதிகமான பசுக்களுக்கு, பசு ஆதார் வழங்கப்பட்டதோடு இது கால்நடை மேலாண்மையில் முக்கிய அம்சமாக உள்ளது. நாட்டில் உள்ள 54 பால் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 17.3 லட்சத்துக்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்கள் தானியங்கி பால் சேகரிப்பு அமைப்பின் மூலம் பயனடைந்துள்ளனர்.

தரவு அடிப்படையிலான கால்நடை மேலாண்மையை மேம்படுத்தும் வகையில் பாரத் பசுதன் இணையதளம் கால்நடைகளின் இனப்பெருக்கும், செயற்கை கருவூட்டல், சுகாதார சேவைகள், தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளை பதிவு செய்ய உதவுகிறது. இந்த இணையதளத்தில் 84 கோடிக்கும் அதிகமான நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கால்நடை மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட விவசாயிகள் இதன் மூலம் பெரிதும் பயனடைகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212724&reg=3&lang=1

*

TV/SV/KPG/PD


(रिलीज़ आईडी: 2212840) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati