நிதி அமைச்சகம்
நிதி அமைச்சகத்தின் 2025-ஆம் ஆண்டு கண்ணோட்டம்: நேரடிப் பணப்பரிமாற்றம் மற்றும் நிதி மேலாண்மையில் சாதனை
प्रविष्टि तिथि:
08 JAN 2026 6:08PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை, பொது நிதி மேலாண்மை அமைப்பின் மூலம் நிதி ஆளுமை மற்றும் பொதுநலத் திட்டங்களில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025-26 நிதியாண்டில் 966 திட்டங்களின் கீழ் நேரடிப் பணப்பரிமாற்றம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. டிசம்பர் 31, 2025 வரை, சுமார் 210.56 கோடி பரிவர்த்தனைகள் மூலம் பயனாளிகளுக்கு ரூ.2.87 லட்சம் கோடி நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.
நிதி நிர்வாகத்தைச் சீரமைக்க கௌஹாத்தி, ஜெய்ப்பூர், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டு 26 மாநிலங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், பயனாளிகளின் குறைகளைத் தீர்க்க 'டிபிடி ஓபன் ஹவுஸ்' மற்றும் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் மேலாண்மை போன்ற மக்கள் நலத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் ஆண்டுக்கு 1.5 லட்சம் புகார்கள் வரை கையாளப்பட்டு, அரசு நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212546®=3&lang=1
செய்தி வெளியீட்டு எண் 2212546
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2212667)
आगंतुक पटल : 17