நிதி அமைச்சகம்
சுவாமி (SWAMIH) முதலீட்டு நிதி: 61,000 வீடுகள் ஒப்படைப்பு - பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கை
प्रविष्टि तिथि:
08 JAN 2026 7:13PM by PIB Chennai
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன், முடங்கிக் கிடக்கும் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் கொண்ட வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்ய 2019-இல் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன்,'சுவாமி' (SWAMIH) முதலீட்டு நிதி தொடங்கப்பட்டது. இதன் முதலீட்டு காலம் 2025 டிசம்பர் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், இந்த நிதி தனது இலக்குகளை வெற்றிகரமாக எட்டியுள்ளது. 30 நகரங்களில் 145-க்கும் மேற்பட்ட திட்டங்களுடன், நாட்டின் மிகப்பெரிய வீட்டுவசதி தீர்வு தளமாக இது உருவெடுத்துள்ளது.
2025 டிசம்பர் 15 நிலவரப்படி, 110 திட்டங்களின் கீழ் சுமார் 61,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகளை வழங்கி, 4 லட்சம் மக்களின் கனவை நனவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களின் மூலம் இதுவரை 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், கட்டுமானப் பணிகள் மூலம் சிமெண்ட் மற்றும் கம்பி தேவையை அதிகரித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த நிதி வித்திட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகள் மூலம் சுமார் ரூ.6,900 கோடி வருவாயை ஈட்டித் தந்துள்ள இந்த நிதி, தான் பெற்ற முதலீட்டில் 50 சதவீதத்தை முதலீட்டாளர்களுக்குத் திரும்ப அளித்து நிதி ஒழுக்கத்தையும் நிரூபித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, பட்ஜெட் 2025-26 இல் 'சுவாமி நிதி-2' (SWAMIH Fund-2) அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.15,000 கோடி மதிப்பிலான இந்த இரண்டாம் கட்ட நிதியின் மூலம் மேலும் ஒரு லட்சம் வீடுகளை விரைவாகக் கட்டி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினரின் நலனைப் பாதுகாப்பதில் அரசின் உறுதியை வெளிப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212593®=3&lang=1
செய்தி வெளியீட்டு எண் 2212593
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2212634)
आगंतुक पटल : 17