உள்துறை அமைச்சகம்
சைபர் குற்றவியல் பிரிவுகளின் உருவாக்கம்
प्रविष्टि तिथि:
09 DEC 2025 5:45PM by PIB Chennai
நாட்டில் உள்ள அனைத்து வகையான சைபர் குற்றங்களையும் ஒருங்கிணைந்த மற்றும் விரிவான முறையில் கையாள்வதற்காக, உள்துறை அமைச்சகம் 'இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம்' (ஐ4சி) என்றஇணைக்கப்பட்ட அலுவலகத்தை அமைத்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து வகையான சைபர் குற்றங்கள் தொடர்பான சம்பவங்களைப் பொதுமக்கள் புகாரளிக்க ஏதுவாக 'தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் தளம்' (https://cybercrime.gov.in ) தொடங்கப்பட்டுள்ளது.
ஐ4சி முன்முயற்சிக்கு இணங்க, மாநில/பிராந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையங்களை நிறுவ மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இன்றுவரை, தமிழ்நாடு, பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இந்த மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் இதைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200973®=3&lang=1
***
SS/BR/PD
(रिलीज़ आईडी: 2212394)
आगंतुक पटल : 19