சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநகரக் கண்காணிப்பு அலகுகளின் தேசிய ஆய்வுக் கூட்டம் நாக்பூரில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 07 JAN 2026 7:49PM by PIB Chennai

"செயலூக்கமான கண்காணிப்பு, பாதுகாக்கப்பட்ட நகரங்கள்" என்ற கருப்பொருளில், நாட்டின் 20 முக்கிய நகரங்களுக்கான பெருநகர கண்காணிப்பு அலகுகளின் (எம்எஸ்யு) இரண்டு நாள் தேசிய ஆய்வுக் கூட்டம் நாக்பூரில் ஜனவரி 6,7 தேதிகளில் நடைபெற்றது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சௌரப் ஜெயின் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குனர் டாக்டர் ரஞ்சன் தாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஐதராபாத், சிம்லா உள்ளிட்ட பெருநகர மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் பங்கேற்றனர்.

முக்கிய அம்சங்கள்: நகர்ப்புறங்களில் நோய் பரவலை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்கான 'முன்னெச்சரிக்கை எச்சரிக்கை அமைப்புகளை' வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. நாக்பூரில் மேற்கொள்ளப்பட்ட மூளைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நகரங்களின் சிறந்த செயல்பாடுகள் முன்மாதிரியாகப் பகிரப்பட்டன.

மேலும், அவசரகால பொதுச் சுகாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ள 'நகர அவசரகாலப் பதிலளிப்புத் திட்டங்களை' உருவாக்குவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. உலக வங்கி, ஐசிஎம்ஆர் மற்றும் எய்ம்ஸ்  வல்லுநர்கள் பங்கேற்ற இக்கூட்டம், இந்திய நகரங்களை நோய் பாதிப்புகளிலிருந்து மீண்டெழும் திறன் கொண்டவையாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு நிறைவடைந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212202&reg=3&lang=1

செய்தி வெளியீட்டு எண்: 2212202

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2212261) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi