விவசாயத்துறை அமைச்சகம்
தரமான பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலான வரைவு மசோதா குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம்: மத்திய வேளாண் அமைச்சகம்
प्रविष्टि तिथि:
07 JAN 2026 6:03PM by PIB Chennai
விவசாயிகளுக்கு தரமான பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வரைவு பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதா குறித்த கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று மத்திய வேளாண் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகள் சட்டம் 1968 மற்றும் விதிமுறைகள் சட்டம் 1971 ஆகியவற்றுக்கு மாற்றாக இந்த புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா வர்த்தகம் புரிதலை எளிதாக்குவதற்கும், சிறிய அளவிலான தவறுகளை குற்றமற்றதாக கருத வகை செய்கிறது. தற்போதைய தேவைகளுக்கேற்ப உருவாக்கப்பட்டுள்ள இந்த மசோதா, விவசாயிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும் உதவுகிறது.
வேளாண் நடைமுறை சார்ந்த திட்டங்களை முறைப்படுத்தவும், தொழில்நுட்பம் அடிப்படையிலான நடைமுறைகளைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் இந்த மசோதா உதவுகிறது. போலியான பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளையும் இந்த மசோதா உள்ளடக்கியுள்ளது. பூச்சிக்கொல்லிகள் தொடர்பான கட்டாய ஆய்வக சோதனைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கும் இந்த வரைவு மசோதா வகை செய்கிறது. இந்த வரைவு மசோதா குறித்து மக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பிப்ரவரி 4-ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு மத்திய வேளாண் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2212250)
आगंतुक पटल : 20