தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது: மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா
प्रविष्टि तिथि:
07 JAN 2026 5:34PM by PIB Chennai
புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெறும் மண்டல அளவிலான இரண்டு நாள் மாநாட்டை இன்று (7.01.2026) காணொளி மூலம் தொடங்கிவைத்து உரையாற்றினார். அப்போது, இந்தப் புதிய தொழிலாளர் சட்டங்களின் விதிமுறைக்கு ஏற்ப மாநில அளவிலான சட்டங்களில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் பல்வேறு மாநிலங்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதற்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வருடாந்திர சுகாதார பரிசோதனைகள் அபாயகரமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு வழங்குதல், பணிநியமன கடிதங்களை கட்டாயம் வழங்க வகை செய்தல், பணிக் கொடை பெறுவதற்கான காலவரையறையை ஐந்து ஆண்டுகளில் இருந்து ஒரு ஆண்டாக குறைத்தல், தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்த உதவிடும் என்று அவர் கூறினார்.
இந்தப் புதிய சட்டங்களுக்கு சர்வதேச
ஊடகங்கள் நேர்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த சட்டங்கள் குறித்து விரிவாக விவாதிப்பதற்கும், அவற்றை திறம்பட செயல்படுத்துவதற்கும் இதுபோன்ற மண்டல மாநாடுகள் உதவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தொழிலாளர் சட்டங்களை எளிதாக அமல்படுத்த ஏதுவாக அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளுக்கான பதில்கள் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் தொழிலாளர் சட்டங்களின் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து விவாதிக்கவும், அவற்றில் உள்ள இடைவெளிகள் மற்றும் வேறுபாடுகளைக் கண்டறிந்து சரி செய்வதற்கும், சட்டப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவதற்கும், தொழிலாளர் குறியீடுகளின் கீழ் உருவாக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212132®=3&lang=1
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2212248)
आगंतुक पटल : 22