அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

வேளாண் கழிவுகள் மூலம் குறைந்த செலவில் தேசிய நெடுஞ்சலைகள் அமைக்கப்படுகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

प्रविष्टि तिथि: 07 JAN 2026 5:00PM by PIB Chennai

தேசிய நெடுஞ்சலைகள் அமைப்பதில் புதைப்படிம பொருட்களை சார்ந்திருப்பதற்கு மாறாக  வேளாண் கழிவுகள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டு வருவதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பைரோலிசிஸ் மூலம் பண்ணை கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களைக் கொண்டு அமைக்கப்படும் சாலைகள் குறைந்த செலவில் நீண்ட காலம் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

சாலைக் கட்டுமானத்தில் எஃகு கசடுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் உயிரி எரிபொருள் போன்ற மாற்றுப்பொருட்களை பயன்படுத்தி அமைக்கப்படும் நெடுஞ்சாலைகள் தரமிக்கதாக உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறு கட்டமைக்கப்படும் சாலைகள், சுற்றுச்சூழல் மாசுபாட்டை வெகுவாக குறைக்க உதவிடும் என்றும், சுழற்சி அடிப்படையிலான பொருளாதார தீர்வுகளுக்கு உதவிடும் என்றும் அவர் கூறினார். மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய பெட்ரோலிய நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கிய இந்த வேளாண் கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பசுமைச் சாலைகளை கட்டமைப்பதற்கு பங்களிக்கும் என்று திரு ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212118&reg=3&lang=1

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2212238) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Telugu , English , Urdu , हिन्दी