வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகளவிலான உணவுப்பொருள் வர்த்தகத்தில் முன்னோடி நாடாக உருவெடுத்து வரும் இந்தியாவை எடுத்துக்காட்டும் சர்வதேச உணவுக் கண்காட்சி

प्रविष्टि तिथि: 07 JAN 2026 3:14PM by PIB Chennai

சர்வதேச உணவுப்பொருள் கண்காட்சியின் ஒன்பதாவது பதிப்பு ஜனவரி 8 முதல் 10-ம் தேதி வரை நொய்டாவில் உள்ள கண்காட்சி மையத்தில் நடைபெறவுள்ளது. இந்திய வர்த்தக மேம்பாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி சர்வதேச அளவில் உணவுப்பொருள் விநியோக நடைமுறைகளில் நம்பகத்தன்மை மற்றும் போட்டித்தன்மை கொண்ட இந்தியாவின் நிலையை எடுத்துக்காட்டும் வகையில் நடைபெறவுள்ளது.

ஆசியாவின் மிக முக்கியத்துவம் வாய்ந்த உணவுப்பொருள் வர்த்தக கண்காட்சியாக கருதப்படும். இதில் இந்திய உணவு உற்பத்தியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இந்தக் கண்காட்சியை மத்திய உணவுப்பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் தொடங்கிவைக்கிறார். இது உணவுப் பதப்படுத்துதல் துறையை வலுப்படுத்துவதற்கும், ஏற்றுமதி சார்ந்த நடவடிக்கைகளின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், சர்வதேச அளவிலான சந்தை வாய்ப்புகளை விரிவுப்படுத்துவதற்கும் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துக்காட்டும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே உணவுப்பொருள் விநியோக வழித்தடத்தை தொடங்குவது, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் இருதரப்பு உணவுப்பொருள் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுப்படுத்துவது போன்ற அம்சங்களை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் 120-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உணவுப்பொருள் ஏற்றுமதியில் போட்டித்தன்மையை அதிகரிக்க ஏதுவாக அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சரக்குப் போக்குவரத்துக்கான வசதிகளை ஒருங்கிணைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கண்காட்சியில் சமையல் கலைஞர்களுக்கான பயிற்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212080&reg=3&lang=1

***

AD/SV/RJ/PD


(रिलीज़ आईडी: 2212125) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri