மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
10 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் திறன்களில் பயிற்சியளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்
प्रविष्टि तिथि:
07 JAN 2026 12:13PM by PIB Chennai
ராஜஸ்தான் பிராந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாடு 2026 ஜனவரி 6 அன்று நடைபெற்றது. நிர்வாகம், உள்கட்டமைப்பு, புதுமை கண்டுபிடிப்பு, தொழிலாளர் மேம்பாடு ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் மாற்றத்தக்க பங்களிப்புக் குறித்து தேசிய மற்றும் மாநில அளவில் தலைமைத்துவம் வகிப்பவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், புத்தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை தங்களது கருத்தை எடுத்துரைக்கும் வகையில் இம்மாநாடு நடைபெற்றது. இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சிமாநாடு 2026 பிப்ரவரி 15 முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
இம்மாநாட்டில் உரையாற்றிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், தொழிற்புரட்சி, மின்சாரம், கணினிகள், செமிகண்டக்டர், இணையம், மொபைல் தொழில்நுட்பம் ஆகியவற்றால் ஏற்படுத்தப்பட்டதைப் போன்ற ஒரு பெரும் மாற்றம், தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் அதே போன்று நிகழவிருப்பதாகத் தெரிவித்தார். ஒரு சிலரிடம் மட்டும் குவிந்திருப்பதற்கு மாறாக, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் தொழில்நுட்பம் ஒவ்வொரு தனிநபரையும், ஒவ்வொரு வீட்டையும், ஒவ்வொரு நிறுவனத்தையும் சென்றடைய வேண்டும் என்ற தெளிவான இலக்கை பிரதமர் கொண்டுள்ளார் என்று கூறினார். இந்த இலக்கிற்கு ஏற்ப, நாட்டின் இளைஞர்கள் இந்தப் புதிய தொழில்நுட்ப யுகத்திற்கு முழுமையாகத் தயாராவதை உறுதிசெய்யும் வகையில், பத்து லட்சம் இளைஞர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுத் திறன்களில் பயிற்சி அளிக்கும் ஒரு திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212007®=3&lang=1
***
AD/IR/KPG/PD
(रिलीज़ आईडी: 2212070)
आगंतुक पटल : 28