ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய ஜவுளித்துறை அமைச்சர்கள் மாநாடு குவஹாத்தியில் நாளை தொடங்குகிறது

प्रविष्टि तिथि: 07 JAN 2026 10:06AM by PIB Chennai

மத்திய ஜவுளி அமைச்சகம் அசாம் அரசுடன் இணைந்து குவஹாத்தியில் ஜனவரி 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் தேசிய ஜவுளி அமைச்சர்கள் மாநாடு 2026-ஐ நடத்தவுள்ளது. இந்தியாவின் ஜவுளி: நெசவு வளர்ச்சி, பாரம்பரியம் மற்றும் புதுமைகண்டுபிடிப்பு என்ற தலைப்பின் கீழ் இந்த இரண்டு நாள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஜவுளித்துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

ஜவுளித்துறையில் கொள்கை, முதலீடு, நீடித்த தன்மை, ஏற்றுமதிகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றுக்கான தளத்தை ஏற்படுத்துவது இந்த இரண்டு நாள் மாநாட்டின் நோக்கமாகும்.  வளர்ச்சி, பாரம்பரியம் என்ற கொள்கையுடன் ஏற்றுமதியை ஊக்குவித்தல், வேலைவாய்ப்பு உருவாக்கம், உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தி 2030-ம் ஆண்டுக்குள் உலகளாவிய ஜவுளி உற்பத்தி மையமாக   இந்தியாவை திகழச் செய்ய வேண்டும் என்ற அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் தொடக்க நாளான 2026 ஜனவரி 8 அன்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், அசாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரெட்டா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தொடக்க அமர்வில் இந்தியாவின் ஜவுளித்துறையின் வலிமை, புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் வளமையான பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் வகையிலான கண்காட்சி மற்றும் அரங்குகளும் இடம் பெற உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211971&reg=3&lang=1

***

AD/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2212066) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Khasi , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Assamese , Manipuri