வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள் ஒருங்கிணைந்த தேசிய இயக்கமாக மாற வேண்டும்: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்

प्रविष्टि तिथि: 06 JAN 2026 5:07PM by PIB Chennai

ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளில் அரசுகள், பெருநிறுவனங்கள், சமூகங்கள் மற்றும் தனிநபர்கள் என அனைவரும் பங்கேற்கும் ஒருங்கிணைந்த தேசிய இயக்கமாக ஈடுபட வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.

புது தில்லியில் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊட்டச்சத்து குறித்த பெருநிறுவன சமூகப் பொறுப்பு குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய அமைச்சர், வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதற்கும், நாட்டின் நீண்டகால சமூக - பொருளாதார எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை களைய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

பெருநிறுவன சமூகப் பொறுப்பு என்பது வர்த்தக நடவடிக்கைகளை சமூகத் தாக்கத்துடன் இணைக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக, ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் களைவதில் இது முக்கியதத்துவம் வாய்ந்தது என்று திரு கோயல் கூறினார்.

நிறுவனங்கள் தங்களது நிகர லாபத்தில் 2 சதவீதத்தை பெருநிறுவன சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளுக்காகச் செலவிட வேண்டும் என்று சட்டபூர்வமாக கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையிலும், இதனை குறைந்தபட்ச வரம்பாகவே கருத வேண்டும் என்றும் அவர் கூறினார். பெருநிறுவன சமூகப் பொறுப்பு ஒரு சுமையாகக் கருதாமல், மாறாக, சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கான ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாக கருத வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார்.

சேவை மனப்பான்மை, இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மரபுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை எடுத்துரைத்த திரு. கோயல், பல தனிநபர்களும் அமைப்புகளும் தாமாக முன்வந்து தங்கள் லாபத்தின் ஒரு பகுதியை சமூக நலன்களுக்காகச் செலவிடுகின்றன. இது கட்டாயப்படுத்தப்பட்ட பெருநிறுவன சமூகப் பொறுப்புத் தேவையை விட மிக அதிகம் என்று கூறினார். ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான முயற்சிகளைத் தீவிரப்படுத்த அனைத்து தரப்பினருக்கும் இந்தத் திட்டம் ஒரு விழிப்புணர்வாக உள்ளது என்று திரு கோயல் கூறினார்.

 இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜார், பெருநிறுவன சமூகப் பொறுப்பு என்பது சமூக மாற்றத்திற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக உருவெடுத்துள்ளது என்றும், இது தர்ம சிந்தனைக்கு அப்பாற்பட்டு ஒரு உத்திசார் சமூக முதலீட்டு வழிமுறையாக மாறியுள்ளது என்றும்  கூறினார். ஷிஷு சஞ்சீவனி போன்ற திட்டங்கள், உள்ளூர் மக்களின் பங்கேற்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலம், கூட்டுறவு துறை எவ்வாறு பெருநிறுவன சமூகப் பொறுப்பு வளங்களை உறுதியான சமூக நேர்மறையான விளைவுகளாக திறம்பட மாற்ற முடியும் என்பதை நிரூபிப்பதாக உள்ளது என்று அவர் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211786&reg=3&lang=1

(Release ID:2211786)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2211950) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati