நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் 79-வது நிறுவன தினக் கொண்டாட்டம்

प्रविष्टि तिथि: 06 JAN 2026 7:18PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) 79-வது நிறுவன தினம் இன்று புதுதில்லியில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷி, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு பி.எல். வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய திரு பிரஹலாத் ஜோஷி, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகளை வகுத்து ஏற்றுக்கொள்வதன் மூலம் தரப்படுத்தல் துறையில் பிஐஎஸ் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதாகக் கூறினார். இந்திய தரநிலைகள் இன்று பாரம்பரிய துறைகளைக் கடந்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார இயக்கம், நவீன உள்கட்டமைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், நிலைத்தன்மை, பசுமைப் பொருட்கள், வெடிகுண்டு அகற்றும் அமைப்பு முறைகள் மற்றும் மின்சார விவசாய டிராக்டர்கள் போன்ற வளர்ந்து வரும் பகுதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது  என்று அவர் குறிப்பிட்டார்.

தரக் கட்டுப்பாட்டுப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான மின்னணு கற்றல் தொகுதிகள் தொடங்கப்பட்டதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். ஹால்மார்க்கிங் சீர்திருத்தங்களைப் பற்றி குறிப்பிடுகையில், செப்டம்பர் 1, 2025 அன்று தொடங்கப்பட்ட வெள்ளி ஹெச்யுஐடி (HUID) ஹால்மார்க்கிங் திட்டம், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியைக் குறிக்கிறது என்று திரு ஜோஷி கூறினார். புதிய முறையின் கீழ் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட வெள்ளிப் பொருட்கள் ஏற்கனவே ஹால்மார்க் செய்யப்பட்டுள்ளன. வெள்ளி ஹால்மார்க்கிங் தன்னார்வமாக இருந்தாலும், ஹெச்யுஐடி அடிப்படையிலான குறியிடுதல் செப்டம்பர் 1, 2025 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

 

பிஐஎஸ் ஆய்வகங்களைத் தொடர்ந்து மேம்படுத்துதல், தேசிய முன்னுரிமைப் பகுதிகளுக்கான விரைவான தர நிர்ணயம் மற்றும் சர்வதேச தரப்படுத்தலில் வலுவான இந்தியத் தலைமைத்துவம் ஆகியவற்றிற்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார். "அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் முயற்சி மற்றும் அனைவரின் நம்பிக்கை" என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இணையும் வகையில், "இந்தியாவில் தயாரிக்கப்பட்டது" என்பதை "இந்தியாவாலும், உலகத்தாலும்  நம்பப்பட்டது" என்று மாற்றுவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211859&reg=3&lang=1

(Release ID: 2211859)

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2211949) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada