சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
நொய்டா ஆணையத்தால் பராமரிக்கப்படும் சாலைகளில் குறைந்த அளவிலான மாசு இருப்பது காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
06 JAN 2026 3:15PM by PIB Chennai
தேசிய தலைநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான காற்றுத் தர மேலாண்மை ஆணையம், தற்போதைய தரநிலைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டு வரும் செயல் திட்டத்தின் சட்டப்பூர்வ கட்டமைப்பின் கீழ், அதன் தொடர் கண்காணிப்பு, ஆய்வு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நொய்டா ஆணையத்தால் பராமரிக்கப்படும் சாலைகளில் தூய்மைப் பணிகள் ஏந்திரமயமாக்கப்பட்ட துப்புரவுப் பணிகள், ஒட்டுமொத்த பராமரிப்பின் நிலை குரித்து மதிப்பீடு செய்வதற்காக, 05.01.2026 அன்று நொய்டாவில் ஒரு ஆய்வு நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த ஆய்வு நொய்டா ஆணையத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட 142 சாலைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. தூசி குறைப்பு நடவடிக்கைகளின் கள அளவிலான செயலாக்கத்தை மதிப்பீடு செய்தல் கண்களுக்குப் புலப்படும் தூசிகள், நகராட்சி திடக்கழிவு, கட்டுமான இடிபாடுகள் மற்றும் திறந்தவெளியில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகள் தொடர்பான சிக்கல்களை அடையாளம் காண்பது ஆகிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உத்தரப் பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகளைக் கொண்ட பத்து குழுக்கள் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஆய்வுகளின் போது புவிசார் இருப்பிடம், நேரத்துடன் முத்திரையிடப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த ஆய்வு அறிக்கையின் ஒரு பகுதியாக ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட விவரங்கள் உத்வேகம் அளிக்கும் ஒட்டுமொத்த சூழலை எடுத்துக் காட்டுவதாக உள்ளன. ஆய்வு செய்யப்பட்ட 142 சாலைப் பகுதிகளில், 04 பகுதிகளில் மட்டுமே அதிக அளவில் கண்ணுக்குப் புலப்படும் அளவில் சாலைகளில் தூசு படிந்திருந்தது தெரிய வந்துள்ளது. 24 பகுதிகளில் மிதமான தூசி படிந்துள்ளது என்றும், 66 பகுதிகளில் குறைந்த அளவிலான தூசி அடர்த்தி பதிவாகியுள்ளது என்றும் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211751®=3&lang=1
***
AD/SV/KR
(रिलीज़ आईडी: 2211811)
आगंतुक पटल : 19