பாதுகாப்பு அமைச்சகம்
குடியரசு தின கொண்டாட்டங்கள் 2026-ன் ஒரு பகுதியாக, மாநில அளவிலான தேசிய பள்ளி பேண்டு வாத்திய போட்டி 2025 – 26 நிறைவு
प्रविष्टि तिथि:
05 JAN 2026 12:49PM by PIB Chennai
குழந்தைகளிடம் தங்களுடைய பள்ளி மற்றும் நாடு குறித்த ஒற்றுமை, பற்று, பெருமை ஆகிய உணர்வுகளை ஏற்படுத்த குடியரசு தின கொண்டாட்டங்கள் 2026-ன் ஒரு பகுதியாக, மாநில அளவிலான தேசிய பள்ளி பேண்டு வாத்திய போட்டி 2025 – 26 உற்சாகமான பங்கேற்புடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இப்போட்டி மாநில, மண்டல, தேசிய அளவில் (இறுதி) என மூன்று நிலைகளாக நடத்தப்பட்டது. சிறுவர்கள் ப்ராஸ் பேண்டு, சிறுமிகள் ப்ராஸ் பேண்டு, சிறுவர்கள் பைப் பேண்டு, சிறுமிகள் பைப் பேண்டு என நான்கு வகைகளாக நடத்தப்பட்டது.
தேசிய பள்ளி பேண்டு வாத்திய போட்டி 2025 – 26-க்கான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய கல்வி அமைச்சகத்தின் மூலம் 2025 அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்டது.
மாநில அளவில் 33 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மொத்தம் 824 பள்ளி பேண்டு குழுக்கள் பதிவு செய்தன. அவற்றில் 763 குழுக்களில் இடம்பெற்றிருந்த 18,013 குழந்தைகள் பங்கேற்றன. மாநில அளவிலான போட்டிக்கு 94 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு மண்டலத்திலும் இருந்து (கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மண்டலம்) 4 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்ற மொத்தம் 16 பேண்டு குழுக்கள் 2026 ஜனவரி 24 அன்று புதுதில்லியில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பங்கேற்கும். அவர்களது செயல்பாடுகளை முப்படைகளை சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட நடுவர்கள் மதிப்பீடு செய்வார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211393®=3&lang=1
***
TV/IR/LDN/SE
(रिलीज़ आईडी: 2211583)
आगंतुक पटल : 11