வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் புது தில்லியில் 4-வது நிறுவன ஆண்டு விழாவைக் கொண்டாடியது

प्रविष्टि तिथि: 04 JAN 2026 6:01PM by PIB Chennai

பாரம்பரிய மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் முயற்சியாக, ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இன்று (04.01.2026) புது தில்லியில் அதன் 4-வது நிறுவன ஆண்டு விழாவைக் கொண்டாடியது.

இந்த அமைப்பு, ஏற்றுமதியாளர்களின் திறன் மேம்பாடு, ஏற்றுமதி நடைமுறைகள், ஒழுங்குமுறை இணக்கத்தை எளிதாக்குதல், முக்கிய வெளிநாட்டு சந்தைகளில் வணிகக் கூட்டங்கள், சர்வதேச கண்காட்சிகள், கருத்தரங்குகள், மக்கள் தொடர்புத் திட்டங்களை ஏற்பாடு செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்திப் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ஆயுஷ் மூலிகைப் பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டில் 6.11 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இது 2023–24 ஆம் ஆண்டில் 64.92 மில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2024–25 ஆம் ஆண்டில் 68.89 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது. ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வளர்ச்சி அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ மூலிகைப் பொருட்களுக்கான உலகளாவிய தேவையை பிரதிபலிக்கிறது.

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள், இந்தியா-ஓமன் பொருளாதார ஒப்பந்தம்,  இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களில் முறையான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. பாரம்பரிய மருத்துவம் குறித்த 2-வது உலக சுகாதார அமைப்பின் உச்சிமாநாட்டின் போது (17–19 டிசம்பர் 2025) பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுஷ் தரக் குறியீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது ஆயுஷ் தயாரிப்புகளின் தர உத்தரவாதத்தையும் உலகளாவிய அங்கீகாரத்தையும் வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, சோவா-ரிக்பா, ஹோமியோபதி, பிற இந்திய பாரம்பரிய முறைகள் தொடர்பான பொருட்களின் ஏற்றுமதியை நிர்வகிக்க, வர்த்தக அமைச்சகத்தின் ஆதரவுடன், ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து இந்தக் கவுன்சில் செயல்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211272&reg=3&lang=1

***

AD/PLM/RK


(रिलीज़ आईडी: 2211292) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi