பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு முகமையின் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு பெங்களூரில் தொடங்கியது

प्रविष्टि तिथि: 04 JAN 2026 3:41PM by PIB Chennai

விமானப்படை மேம்பாட்டு முகமையான ஏடிஏ (ADA) ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் தேசிய கருத்தரங்கான 'ஏரோநாட்டிக்ஸ் 2047', இன்று (ஜனவரி 04, 2026) பெங்களூருவில் தொடங்கியது. விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் இந்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். அவர் தமது உரையில், இலகுரக போர் விமானமான தேஜஸ் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக ஏடிஏ-வைப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க உள்நாட்டில் அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்த கருத்தரங்கில், விண்வெளித் துறை வல்லுநர்கள், விமான தொழில்துறை பிரதிநிதிகள், கல்வியாளர்கள், விமான ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  அடுத்த தலைமுறை போர் விமானங்கள், உந்துவிசை தொழில்நுட்பங்கள், விமான சோதனை நுட்பங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம், போர் விமானங்களில் பராமரிப்பு சவால்கள் உள்ளிட்ட நவீன விண்வெளி தொழில்நுட்பங்களின் பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211249&reg=3&lang=1

***

AD/PLM/RK


(रिलीज़ आईडी: 2211273) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Kannada