பாதுகாப்பு அமைச்சகம்
ஆபரேஷன் சிந்தூரின் போது டிஆர்டிஓ ஆயுதங்களின் உறுதியான பங்களிப்பு , தேச நலன்களைப் பாதுகாப்பதில் அதன் உறுதியான நிலைக்கு சான்றாகும்: டிஆர்டிஓ தினத்தில் பாதுகாப்பு அமைச்சர்
प्रविष्टि तिथि:
01 JAN 2026 3:40PM by PIB Chennai
ஆபரேஷன் சிந்தூரின் போது டிஆர்டிஓ ஆயுதங்களின் உறுதியான பங்களிப்பு , தேச நலன்களைப் பாதுகாப்பதில் அதன் உறுதியான நிலைக்கு சான்றாகும் என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டிஆர்டிஓ-வின் 68-வது நிறுவன தினத்தையொட்டி 2026 ஜனவரி 01 அன்று புதுதில்லியில் உள்ள அதன் தலைமையகத்திற்கு வருகை தந்தார். ஆயுதப் படைகளை அதிநவீன தொழில்நுட்பங்கள்/உபகரணங்களுடன் தயார்செய்து உள்நாட்டுத் திறன்களை வலுப்படுத்தியதற்காக டிஆர்டிஓவைப் பாராட்டிய பாதுகாப்பு அமைச்சர், ஆபரேஷன் சிந்தூரின் போது டிஆர்டிஓவின் உபகரணங்கள் தடையின்றி செயல்பட்டதாகவும், வீரர்களின் மன உறுதியை அதிகரித்ததாகவும் கூறினார்.
தொழில்நுட்பத்தை உருவாக்குவோருக்கு டிஆர்டிஓ நம்பிக்கையளிப்பது, மக்களை நம்பிக்கையுடனும், உறுதியுடனும் பார்க்க வைக்கிறது என்று ராஜ்நாத் சிங் பாராட்டினார். தனியார் துறையுடன் டிஆர்டிஓவின் ஒத்துழைப்பை சுட்டிக்காட்டிய அவர், தொழில், கல்வித்துறை மற்றும் புத்தொழில் நிறுவனங்களுடன் அதிகரித்த ஈடுபாட்டின் விளைவாக ஒருங்கிணைந்த பாதுகாப்புச் சூழல் அமைப்பு உருவாகியுள்ளது என்றார். "டிஆர்டிஓ தனது அமைப்புகள், நடைமுறைகள் மற்றும் பணிமுறைகளை தொடர்ந்து மேம்படுத்தியுள்ளது. கொள்முதல் முதல் திட்ட மேலாண்மை வரை, தொழில்துறை ஈடுபாடு முதல் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் எம்எஸ்எம்இக்களுடன் ஒத்துழைப்பது வரை, வேலையை எளிதாகவும், வேகமாகவும், நம்பகமானதாகவும் மாற்ற அதனிடம் ஒரு வெளிப்படையான முயற்சி உள்ளது" என்று அவர் கூறினார்.
"உலகம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது. தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு மற்றும் புதிய போர்க் களங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன. இவை நேற்றைய அறிவை காலாவதியாக்குகின்றன. கற்றல் முடிந்துவிட்டது என்று நாம் ஒருபோதும் கருதக்கூடாது. நாம் தொடர்ந்து கற்று நமக்கு நாமே சவால்களை உருவாக்கி , புதிய தலைமுறைக்கு வழி காட்ட வேண்டும்," என்றும் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்த சந்திப்பின் போது, பாதுகாப்புத் துறை செயலாளரும் டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், தற்போதைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள், 2025 -ல் அமைப்பின் சாதனைகள், தொழில்துறை , புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வித்துறையை மேம்படுத்துவதில் பல்வேறு முயற்சிகள், 2026-ம் ஆண்டிற்கான செயல்திட்டம் குறித்து பாதுகாப்பு அமைச்சருக்கு விளக்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2210469®=3&lang=1
***
AD/SMB/RK
(रिलीज़ आईडी: 2210598)
आगंतुक पटल : 9