குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் நாளை (02.01.2026) தமிழ்நாடு வருகை
प्रविष्टि तिथि:
01 JAN 2026 3:30PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் பயணமாக நாளை (02.01.2026) தமிழ்நாடு வருகிறார்.
அவரது தலைமையில் சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது.
இதனையடுத்து தனியார் விடுதியில் நடைபெறும் ராம்நாத் கோயங்கா சாகித்ய சம்மேளன நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார். அன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் பொது வரவேற்பு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார். முன்னதாக மக்கள் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநர் ஏற்பாடு செய்துள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
நாளை மறுநாள் சனிக்கிழமை அன்று வேலூரில் உள்ள தங்கக் கோவிலில் நடைபெறும் ஸ்ரீ சக்தி அம்மாவின் பொன்விழா நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார். அன்று பிற்பகல் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் 9-வது சித்தா தின கொண்டாட்ட நிகழ்ச்சியிலும் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்கிறார்..
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2210464®=3&lang=1
***
AD/SV/KPG/RK
(रिलीज़ आईडी: 2210584)
आगंतुक पटल : 58