ரெயில்வே அமைச்சகம்
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் அதிவேக சோதனை ஓட்டம் வெற்றி
प्रविष्टि तिथि:
31 DEC 2025 4:10PM by PIB Chennai
கோட்டா - நாக்டா ரயில் பாதையில் நடைபெற்ற வந்தே பாரத் படுக்கை வசதியுடன் கூடிய ரயிலின் அதிவேக சோதனை ஓட்டம், மணிக்கு 180 கி.மீ வேகத்தை எட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த சோதனையில், ரயிலின் நிலைத்தன்மை, பிரேக்கிங் திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் திருப்திகரமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ரயிலின் சீரான இயக்கத்தைக் குறிக்கும் வகையில், அதிவேகத்திலும் நீர் நிரம்பிய கண்ணாடி குவளை சோதனை குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 16 பெட்டிகளைக் கொண்ட இந்த நவீன ரயில், நீண்ட தூரப் பயணங்களுக்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
பாதுகாப்பு: 'கவச்' பாதுகாப்பு அமைப்பு, சிசிடிவி கண்காணிப்பு மற்றும் தீயணைப்பு வசதிகள்.
வசதிகள்: தானியங்கி கதவுகள், அதிர்வு இல்லாத பயணம், உயர்தர படுக்கை வசதிகள் மற்றும் நவீன கழிவறைகள்.
தொழில்நுட்பம்: ஆற்றல் சேமிப்பு பிரேக்கிங் சிஸ்டம், காற்று சுத்திகரிப்புக்கான UV-C விளக்குகள் மற்றும் அவசர கால தகவல் தொடர்பு வசதி.
மாற்றுத்திறனாளிகள்: அவர்களுக்கென பிரத்யேக கழிவறை வசதி ஓட்டுநர் பெட்டியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றி, 'தற்சார்பு இந்தியா' திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வேயின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பறைசாற்றுவதுடன், விரைவில் பயணிகள் சேவைக்கு வருவதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2210145®=3&lang=1
***
TV/VK/SE
(रिलीज़ आईडी: 2210330)
आगंतुक पटल : 11