திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவு தயார் நிலைக்கான திறன் மேம்பாடு சிறப்பு நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 DEC 2025 4:39PM by PIB Chennai

திறன் இந்தியா இயக்கத்தின் முன்முயற்சியாக செயற்கை நுண்ணறிவு தயார் நிலைக்கான திறன் மேம்பாடு என்ற சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் 2026, ஜனவரி 1 அன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

மந்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சிசெயற்கை நுண்ணறிவு சார்ந்த எதிர்காலத்திற்கான இந்தியாவின் பணிக்குழுவை தயார் செய்வதற்கான அரசின் தொடர் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்மத்திய திறன் மேம்பாடுதொழில் முனைவு மற்றும் கல்வித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில், எதிர்காலத்திற்கு தயாரான திறன் பயிற்சி திட்டங்களில் கூடுதலாக இளைஞர்கள் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் #திறன்தேசியசவால் (#SkillTheNationChallenge) என்ற தேசிய விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைப்பதுடன், மாணவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கற்போருக்கு செயற்கை நுண்ணறிவு சான்றிதழ்களையும் திருமதி திரெளபதி முர்மு வழங்குவார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம் குடியரசுத் தலைவர் மாளிகையில் “தொடக்க நிலையினருக்கான செயற்கை நுண்ணறிவு” என்ற சிறப்பு அமர்வை நடத்தும். இதில் கூகுள் நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் உலகளாவிய பிரபல செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் பயிற்சி குறித்து கலந்துரையாடல் நடத்துவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209830&reg=3&lang=1 

***

TV/IR/RK/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2209959) வருகையாளர் எண்ணிக்கை : 55
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu , Malayalam