PIB Headquarters
இந்தியாவின் வளர்ச்சியில், திருப்புமுனையாக அமைந்த 2025 ஆண்டு இந்தியாவின் பொன்னான தருணம்: உயர் வளர்ச்சி, குறைவான பணவீக்கம்
प्रविष्टि तिथि:
29 DEC 2025 2:44PM by PIB Chennai
2025-26 - ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த விகிதம் முதல் காலாண்டில் இருந்த 7.8 சதவீதம் மற்றும் 2024-25 - ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இருந்த 7.4 சதவீதம் என்பதைக் காட்டிலும் அதிகமாகும்.
நவம்பர் 2025 - ம் ஆண்டில், நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அக்டோபர் 2025 - ல் இருந்த 5.2 சதவீதத்திலிருந்து 4.7 சதவீதமாகக் குறைந்தது. இது ஏப்ரல் 2025 - க்குப் (5.1%) பிறகு மிகக் குறைந்த விகிதமாகும்.
நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்க விகிதம் ஜனவரி 2025 - ம் ஆண்டில் இருந்த 4.26 சதவீதத்திலிருந்து நவம்பர் 2025 - ல் படிப்படியாகக் குறைந்து 0.71 சதவீதமாக இருந்தது.
ஜனவரி 2025-ல் 36.43 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சரக்கு ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில், நவம்பர் 2025-ல் 38.13 பில்லியன் அமெரிக்க டாலராக விரிவடைந்துள்ளது.
வளர்ச்சி, நிலைத்தன்மை, நம்பிக்கை: இந்தியப் பொருளாதாரத்தின் மூன்று தூண்கள் உலகின் விரைவான வளர்ச்சி கண்டு வரும் முக்கியப் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளதுடன், இதனைத் தக்க வைத்துக் கொள்ளும் நிலையில் உள்ளது. சுதந்திரம் அடைந்து நூறாவது ஆண்டில் (2047-க்குள்) உயர் நடுத்தர வருமான நிலையை அடையும் லட்சியத்துடன், நாடு பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய வலுவான அடித்தளங்களின் மீது கட்டமைத்து வருகிறது. 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், இந்தியா ஜப்பானை விஞ்சி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. மேலும், 2030-ம் ஆண்டில், 7.3 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ற மதிப்பீட்டுடன், அடுத்த 2.5 முதல் 3 ஆண்டுகளில் ஜெர்மனியை விஞ்சி மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் நிலையில் உள்ளது. இந்த வளர்ச்சியின் வேகம், 25-26 - ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது உலகளவில் நீடித்து வரும் வர்த்தக நிச்சயமற்ற சூழலுக்கு இடையே, இந்தியாவின் மீள்திறனை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. வலுவான தனியார் நுகர்வு அடிப்படையிலான உள்நாட்டு உந்துசக்திகள் இந்த வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் முக்கியப் பங்கு வகித்தன. குறிகாட்டிகள் நீடித்த பொருளாதாரச் செயல்பாடுகளை எடுத்துக் காட்டுவதாக உள்ளன. பணவீக்க விகிதம் குறைவான அளவில் உள்ளது. வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்து வருகிறது. ஏற்றுமதி செயல்திறன் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. மேலும், வர்த்தகத் துறைக்கு வலுவான கடன் உதவிகளுடன் நிதிபரிவர்த்தனைகள் சாதகமாக நீடிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209412®=3&lang=1
***
TV/SV/KR
(रिलीज़ आईडी: 2209498)
आगंतुक पटल : 21