தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழக்கத்தில் இபிஎஃப்ஒ அதிகாரிகளுக்கான நான்கு வார பயிற்சித் திட்டம் நிறைவு

இடுகை இடப்பட்ட நாள்: 28 DEC 2025 11:09AM by PIB Chennai

குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழக்கத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஒ அதிகாரிகளுக்கான நான்கு வார பயிற்சித் திட்டம் நடைபெற்றது.

இதன் நிறைவு அமர்வு 26.12.2025 அன்று காந்தி நகரில் நடைபெற்றது. இதில் பிராந்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் ரிஸ்வான் உதீன் உரையாற்றினர்.

குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (GNLU), காந்திநகர், இபிஎஃப்ஒ-ன் தேசிய அகாடமியான பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா தேசிய சமூகப் பாதுகாப்பு அகாடமியுடன் இணைந்து இந்தப் பயிற்சியை ஏற்பாடு செய்தது.

டிசம்பர் 1, 2025 அன்று தொடங்கிய இந்த அறிமுகப் பயிற்சித் திட்டத்தில் 62 அமலாக்க அதிகாரிகளும் கணக்கு அதிகாரிகளும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சட்டம் தொடர்பான பல்வேறு முக்கியமான தலைப்புகளில் மொத்தம் 81 அமர்வுகள் இந்தப் பயிற்சித் திட்டத்தில் இடம்பெற்றன. இதில் அதிகாரிகளுக்கு 121.5 மணிநேர பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சித் திட்டத்தின் போது மொத்தம் 26 அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் அமர்வுகளை நடத்தினர்.

குற்றவியல் சட்டம், சிவில் சட்டம், சான்றுகள் சட்டம், அரசியலமைப்பு விதிகள், நீதித்துறை சார்ந்த அதிகாரிகளின் முக்கியத்துவம், இணையதளச் சட்டங்கள், புதிய தொழிலாளர் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.

                                                                         ***                           

(Release ID: 2209152)

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2209237) வருகையாளர் எண்ணிக்கை : 34
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati