நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின் டிராக்டர்களின் சோதனைக்கான தரநிலையை மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி வெளியிட்டார்

प्रविष्टि तिथि: 28 DEC 2025 12:06PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற 2025-ம் ஆண்டுக்கான தேசிய நுகர்வோர் தின நிகழ்ச்சியை முன்னிட்டு, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுத்தும் மின் டிராக்டர்களுக்கான சோதனை தரநிலை குறியீட்டை வெளியிட்டார். இந்த தரக் குறியீடு ஐஎஸ் 19262: 2025 என்பதாகும். விவசாயத்துக்கான மின் டிராக்டர்களின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, செயல்திறன் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான இந்த சீரான சோதனை நெறிமுறைகள் இந்திய தர நிர்ணய அமைவனத்தால் உருவாக்கப்பட்டது.

இது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடையேயும், பொதுவான வழிகாட்டுதல்களை வழங்குவதுடன், விவசாயத்துக்கானமின்சார டிராக்டர்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சோதனைகள் தொடர்பாக ஒரு பொதுவான புரிதலை ஏற்படுத்துகிறது.

அங்கீகரிக்கப்பட்ட சோதனை நிறுவனங்கள் மூலம் ஐஎஸ் 19262: 2025 தரக் குறியீட்டைச் செயல்படுத்துவது நாட்டில் விவசாயத்துக்கா மின்சார டிராக்டர்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும்

ஐஎஸ் 19262: 2025 சோதனை தரக் குறியீட்டில் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சோதனைத் தரவுகள்விவசாயத்துக்கானமின்சார டிராக்டர்களின் செயல்திறனையும் பாதுகாப்பையும் மதிப்பிடுவதற்கான அடிப்படையை வழங்கும். இத்தகைய தரவு, மின்சார டிராக்டர்களுக்கான மதிப்பீட்டுத் திட்டங்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் உதவும். கட்டமைக்கப்பட்ட, சீரான சோதனை நடைமுறைகளை பரிந்துரைப்பதன் மூலம், நம்பகமான, பாதுகாப்பான தயாரிப்புகளை வழங்குவதில் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதே இந்தத் தரநிலையின் நோக்கமாகும். இது விவசாயிகளுக்கு  விவசாயத்துக்கா மின்சார டிராக்டர்களின் செயல்திறனில் அதிக நம்பிக்கையை அளிக்கும்.

இந்தியாவின் பண்ணை இயந்திரமயமாக்கலில் விவசாயத்துக்கான மின்சார டிராக்டர்கள் முக்கியமான பங்கைக் கொண்டுள்ளன. இந்த டிராக்டர்களில், வழக்கமான டீசல் இன்ஜின்களுக்குப் பதிலாக பேட்டரிகளால் இயக்கப்படும் மின்சார மோட்டார் உந்துவிசை அமைப்புகள் உள்ளன. பேட்டரி தொழில்நுட்பம், மின்சார மோட்டார்கள், பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் விரைவான முன்னேற்றங்களுடன், கடந்த சில ஆண்டுகளில் மின்சார டிராக்டர்களின் தொழில்ந்நுட்பம் கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளது.

நாட்டில் விவசாயத்துக்கான மின்சார டிராக்டர்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், இணக்கமான சோதனை நடைமுறைகள் தேவை. இந்த சோதனை நடைமுறைகள் இல்லாதது அவற்றின் செயல்திறன், பாதுகாப்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றை மதிப்பிடுவதில் சவால்களை ஏற்படுத்தியது. இதைக் கருத்தில் கொண்டு வேளாண்மை அமைச்சகத்தின் இயந்திரமயமாக்கல் தொழில்நுட்பப் பிரிவின் கோரிக்கையை ஏற்று, மின்சார டிராக்டர்களுக்கான தரநிலைகளை முன்னுரிமை அடிப்படையில் உருவாக்க, இந்திய தர நிர்ணய அமைவனம் செயலாற்றியது. அதன் அடிப்படையில் மின்சார டிராக்டர் சோதனைக்கான இந்த தரநிலைக் குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209159&reg=3&lang=1

***

AD/PLM/RJ


(रिलीज़ आईडी: 2209208) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Kannada