அணுசக்தி அமைச்சகம்
மோடி அரசின் மிகப்பெரிய அறிவியல் சீர்திருத்தங்களில் ஒன்றாக சாந்தி மசோதா வரலாற்றில் இடம்பிடிக்கும் - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
28 DEC 2025 2:41PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மிகப்பெரிய அறிவியல் சீர்திருத்தங்களில் ஒன்றாக, அணுசக்தி சீர்திருத்தம் தொடர்பான சாந்தி மசோதா வரலாற்றில் இடம்பிடிக்கும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம், அணுசக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று (28.12.2025) செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தில் அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, துணிச்சலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறினார்.
இந்தியாவின் அணுசக்தித் துறையில் சாந்தி மசோதா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தம் என்றும், பாதுகாப்பு, இறையாண்மை, பொது நலன் ஆகியவற்றில் சமரசமற்ற தரங்களைப் பேணும் அதே வேளையில், அமைதியான, தூய்மையான, நிலையான எரிசக்திக்கான திறனும் வலுப்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் கூறினார். 60 ஆண்டுகளாக இதுபோன்ற சீர்திருத்தங்கள் மேற்கோள்ளப்படவில்லை என்றும், தடைகளை அகற்றி, உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் இணைக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் திறனால் மட்டுமே இது சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
அமைதியான அணுசக்தி பயன்பாட்டிற்கான இந்தியாவின் நீண்டகால உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய டாக்டர் ஜிதேந்திர சிங், டாக்டர் ஹோமி பாபாவின் காலத்திலிருந்தே, இந்தியாவின் அணுசக்தி திட்டம் வளர்ச்சி, சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டினார். சாந்தி மசோதா, அமைதியான நோக்கத்திலிருந்து மாறுபடவில்லை என்றும், தூய மின் உற்பத்தி, மருத்துவ பயன்பாடுகள், மேம்பட்ட ஆராய்ச்சி போன்ற நோக்கங்களுக்காக அணுசக்தி விரிவாக்கத்தை வலுப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கு அணுசக்தியும் இன்றியமையாதது என்று அவர் கூறினார். இந்தியா புதைபடிவ எரிபொருள்கள், நிலக்கரி ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைக்கும்போது அணுசக்தி ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் அணுசக்தி திறன் 2014-ம் ஆண்டில் சுமார் 4.4 ஜிகா வாட்டாக இருந்தது எனவும் இப்போது இது கிட்டத்தட்ட இருமடங்காக 8.7 ஜிகாவாட் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறினார். வரும் ஆண்டுகளில் இதை கணிசமாக அதிகரிக்க தெளிவான திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் சுமார் 100 GW அணுசக்தி திறனை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு அரசு செயல்படுகிறது என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209185®=3&lang=1
***
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2209206)
आगंतुक पटल : 13